Published:Updated:

நண்பர் வீட்டுத் திருமணம்; திடீர் நெஞ்சுவலி! - எப்படியிருக்கிறார் பொன்.மாணிக்கவேல்?

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

சில மாதங்களாக மதுரை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சேடப்பட்டி கிராமத்தில் பொன்.மாணிக்கவேல் வசித்து வந்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நெஞ்சுவலி காரணமாகத் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் காணாமல்போன பழைமையான சிலைகளையும் மீட்டு வந்தார். குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்த ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்து இளவரசியான லோகமாதேவி சிலைகள் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. அந்தச் சிலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சாரா பாய் என்ற தனியார் மியூசியத்தில் இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டு வந்தார். இதற்காக தஞ்சை மக்கள், சோழனை மீட்டு வந்த வேலன் என அவரை பாராட்டி வாழ்த்தினார்கள். அவரின் இந்தச் செயலுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் சில மாதங்களுக்குமுன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்
Photo: Vikatan

இதையடுத்து சில மாதங்களாக மதுரை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சேடப்பட்டி கிராமத்தில் பொன்.மாணிக்கவேல் வசித்து வந்துள்ளார். நேற்று புதுக்கோட்டையில் பொன்.மாணிக்கவேலின் நண்பர் ஒருவரின் இல்ல திருமணம் நடைபெற்றது.

இதில் பொன்.மாணிக்கவேல் கலந்துகொண்டார் திருமணம் முடிந்த பிறகு, நேற்று மாலை வரை புதுக்கோட்டையிலேயே இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Vikatan

அங்கு அவருக்கு உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் பொன்.மாணிக்கவேல் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொன்.மாணிக்கவேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவத் தொடங்கியது. பலரும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு