Published:Updated:

``கோயில்களில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடி மறைக்கிறது!" - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

பொன்.மாணிக்கவேல்
News
பொன்.மாணிக்கவேல்

``கோயிலில் தெய்வத்திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. கோயில்களில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடி மறைத்துவருகிறது." - பொன்.மாணிக்கவேல்

``கோயில்களில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடி மறைக்கிறது!" - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

``கோயிலில் தெய்வத்திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. கோயில்களில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடி மறைத்துவருகிறது." - பொன்.மாணிக்கவேல்

Published:Updated:
பொன்.மாணிக்கவேல்
News
பொன்.மாணிக்கவேல்

ராமநாதபுரத்தில் உலக சிவனடியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்துகொண்டனர். சிவனடியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வந்திருக்கிறோம். நாகை, திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலுள்ள கோயில்களில் தெய்வ செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

2017, ஜூலை 21-ல் உயர் நீதிமன்றம் கோயில்களில் 'ஐடல் ஸ்ட்ராங் ரூம்' கட்ட உத்தரவிட்டது. ரூ.340 கோடியில் 26,000 கோயில்களில் கட்ட கடந்த ஆட்சியில் வெறும் பேப்பர் மட்டுமே காண்பிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோயில்களில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடிமறைக்கிறது. எனக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கோயில்களின் வரலாற்றுச் சிற்பங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எனக்கு பயம் கிடையாது. என்னைக் கைதுசெய்யப்போவதாகப் பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.

கோயில்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கும் டி.பி.எஃப் எனப்படும் ஆலய பாதுகாப்புப்படையில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை அவர்கள் எந்தவிதக் கோயில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் இல்லை. தூங்கி எழுந்து செல்ல அவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுத்து கோயில் நிதியை வீணடிக்கின்றனர். எனவே, முப்பது வயதுடைய ஊர்க்காவல் படையினரை நியமித்து, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பயோமெட்ரிக் பதிவு மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவைத்து, கோயில் சிலைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது

அமைச்சர்களின் மனைவிமார்கள் கோயில் கோயிலாகச் சென்று வழிபாடு நடத்துகிறார்கள். தாங்கள் அடித்த பணத்துக்கு சி.பி.ஐ., விஜிலென்ஸ் ரெய்டு வந்துவிடக் கூடாது என்று சாமியை வணங்குகிறார்கள். அமைச்சர்களின் மனைவிமார்கள் கோயிலுக்கு வந்து 500 ரூபாய் பணத்தைக் கொடுக்கிறார்கள். `உங்களைக் காப்பாற்றிக்கொள்ள கோயிலுக்கு வருகிறீர்களே... அந்தக் கோயில் சிலைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாதா?’

மூலவருக்கான பிரதிநிதி போன்றவர்தான் உற்சவர். திருவிழா நாள்களில் மட்டுமே உற்சவரை வெளியில் எடுத்துவருவதும், கேட்டுப் பெறுவதும் முறையானது அல்ல. மூலவரை தரிசிக்க வரும் பக்தர்கள், உற்சவரையும் தரிசித்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். ஆனால் கடந்த அரசும், தற்போதைய அரசும் கோயில் சிலைகளைக் காட்சிப்பொருள்களாக வைத்து அட்டூழியம் செய்துவருகின்றன" என்றார்.