Published:Updated:

பெண் குழந்தைகளை தாய்மாமன்கள் சீராட்டும் `பொன்னூஞ்சல் திருவிழா’ - கொங்கு மண்ணில் கோலாகலம்!

பொன்னூஞ்சல்
News
பொன்னூஞ்சல்

பெண் குழந்தைகள் பட்டாடை அணிவிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 16 வகை சீர்வரிசைகளுடன் காத்திருந்த தாய் மாமன், பெண் குழந்தையின் நெற்றியில் தங்கப் பட்டயம் கட்டி அப்பெண்ணை உறவினர் சூழ தனது தோளில் சுமந்து ஊர்வலமாக வந்து பொன்னூஞ்சலில் அமர வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பண்டைய 26 கொங்கு நாடுகளின் தலைமை இடமாக சங்கரண்டாம்பாளையம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ரத்தின வேணாடுடையார் அரண்மனையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில் `பொன்னூஞ்சல் விழா’ கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொங்கு வேளாளர் சமூக குடும்பங்களில், முதல் பெண் குழந்தைகளை பொன்னூஞ்சலில் ஆட்டும் சீர், தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.

தாய் மாமனின் சீர்வரிசை
தாய் மாமனின் சீர்வரிசை

சோழ மன்னர் இரண்டாவது கரிகாலன், தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேர மன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த, பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க மும்முடி மற்றும் வேணாடுடையார் பட்டம் கொடுத்து, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை வேணாடருக்கு கரிகாலன் அளித்ததாக வரலாறு.

பாலசுப்பிரமணிய வேணாவுடையார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொன்னூஞ்சல் திருவிழாவில், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். கொன்

பொன்னூஞ்சல் விழா
பொன்னூஞ்சல் விழா

அங்கு, 16 வகை சீர்வரிசைகளுடன் காத்திருந்த தாய்மாமன்கள், பெண் குழந்தையின் நெற்றியில் தங்க பட்டயம் கட்டி அப்பெண்ணை உறவினர் சூழ தங்களது தோளில் சுமந்து ஊர்வலமாக வந்து பொன்னூஞ்சலில் அமர வைத்தனர். இந்த பொன்னூஞ்சல் விழா தாய்மாமனின் உறவையும்,பெண் குழந்தைகளை போற்றும் வகையிலும் நடத்தப்பட்டு வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.