Published:Updated:

#Corona: வழக்கம்போல் இயங்கும் நீச்சல் குளம், பார்கள்! - காற்றில் பறக்கும் முன்னெச்சரிக்கை உத்தரவுகள்

பேருந்து நிலையம் அருகில் செயல்படும் பார்
News
பேருந்து நிலையம் அருகில் செயல்படும் பார்

காலை 10 மணிதான் என்றாலும் குடிமகன்கள் பாருக்குள் நிரம்பியே இருந்தார்கள். கொரோனா நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும் காலையிலேயே பார்கள் இயங்கலாமா என்ற கேள்வி நம்முன் எழுந்தது. அந்த பாரில் அரசின் உத்தரவு அப்பட்டமாகக் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.

Published:Updated:

#Corona: வழக்கம்போல் இயங்கும் நீச்சல் குளம், பார்கள்! - காற்றில் பறக்கும் முன்னெச்சரிக்கை உத்தரவுகள்

காலை 10 மணிதான் என்றாலும் குடிமகன்கள் பாருக்குள் நிரம்பியே இருந்தார்கள். கொரோனா நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும் காலையிலேயே பார்கள் இயங்கலாமா என்ற கேள்வி நம்முன் எழுந்தது. அந்த பாரில் அரசின் உத்தரவு அப்பட்டமாகக் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.

பேருந்து நிலையம் அருகில் செயல்படும் பார்
News
பேருந்து நிலையம் அருகில் செயல்படும் பார்

உலகெங்கும் வியாபித்திருக்கிறது கொரோனா. எத்திசைத் திரும்பினாலும் கொரோனா பற்றிய பேச்சுக்களே காதில் ஒலிக்கின்றன. இந்தியாவுக்கு கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே, பொதுமக்களுக்கு அச்சம் தொடங்கிவிட்டன. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இதை தேசிய பேரிடராகக் கடந்த 13-ம் தேதி அறிவித்தது மத்திய அரசு.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மதுபானக் கூடங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் எனப் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும், யாருடனும் கைகுலுக்க வேண்டாம், கை, முகம் ஆகியவற்றை அடிக்கடி கழுவ வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அதிகாரிகள் காற்றில் பறக்கவிடுவதாகவும் அலட்சியமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நீச்சல் குளம் செங்கல்பட்டு
நீச்சல் குளம் செங்கல்பட்டு

செங்கல்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என நகரம் முழுவதும் வலம் வந்தோம். நாம் கண்ட காட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாகவும் நலம் விசாரிப்பதற்காகவும் உறவினர்களும் நண்பர்களும் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருவதால் அங்கு மக்கள் புழக்கம் அதிக அளவில் இருக்கிறது.

எளிதில் நோய்த்தொற்றும் இடம் என்பதால் அங்கு வரும் மக்களுக்குக் கட்டுப்பாடும் விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகிறது. செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள தனியார் நீச்சல் குளத்துக்குச் சென்றோம். அங்கே பலர் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார்கள். நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி உண்டா என்று கேட்டோம். `வெளியில பூட்டிவிடுவோம் சார். நீங்க வந்தால் குளிக்கலாம்’ என அங்கிருந்தவர் நம்மிடமே தெரிவித்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் பாருக்குள் நுழைந்தோம். காலை 10 மணிதான் என்றாலும் குடிமகன்கள் பாருக்குள் நிரம்பியே இருந்தார்கள். கொரோனா நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும் காலையிலேயே பார்கள் இயங்கலாமா என்ற கேள்விதான் நம்முன் எழுந்தது. அந்த பாரில் தமிழக அரசின் உத்தரவு அப்பட்டமாகக் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.

பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்குச் சென்றோம். கொரோனா வைரஸையே கொன்றுவிடும் அளவுக்கு அங்கு அசுத்தம் நிறைந்திருந்தது. துருப்பிடித்த ஓட்டை இரும்புக் கதவுகள், மஞ்சள் கறையுடன் அசுத்தமாக இருந்த கழிவறைகள், அப்புறப்படுத்தப்படாத மலம் என அந்த இடத்தைக் காண்பதற்கே சாமான்யனுக்கு திட மனது வேண்டும். அங்கு அவசரமாக வருபவர்கள் அனைவரும் அந்த அசுத்த குழாய்களையே பயன்படுத்துகிறார்கள். மூக்கைப் பிடிக்கும் அளவில் இருந்த துர்நாற்றம், நம்மை வெளியில் துரத்தியது.

டாஸ்மாக் பார், செங்கல்பட்டு
டாஸ்மாக் பார், செங்கல்பட்டு

செங்கல்பட்டிலுள்ள சினிமா தியேட்டர்கள் 15 நாள்களும் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவிப்பு செய்திருந்தார்கள். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றாலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை.

செங்கல்பட்டு நகரில் உள்ள வேதாசலம் நகரின் தெருக்களில் பலநாள்களாகவே அள்ளப்படாத குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அந்தக் குப்பை முழுவதிலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அப்பகுதியில் உள்ள மாடுகள், மனிதர்கள், உணவுப் பொருள்கள் என ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தது.

செங்கல்பட்டு நகாராட்சி கட்டண கழிவறை
செங்கல்பட்டு நகாராட்சி கட்டண கழிவறை

கொரோனோவையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மோசமாக இருக்கிறது செங்கல்பட்டு நகரம். தமிழக முதல்வரின் உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தினால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் என்கிறார்கள் பொதுமக்கள்!