Published:Updated:

`போஸ்ட்மேன் சிவனுக்கு பத்மஸ்ரீ வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது!’ - சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

போஸ்ட்மேன் சிவன்
போஸ்ட்மேன் சிவன்

`நீலகிரி மாவட்டம், குன்னூர் தபால் அலுவலகத்தில் பகுதிநேர தபால்காரராகப் பணியாற்றிவந்த சிவன், அடர்ந்த காடுகளில் நாள்தோறும் 15 கி.மீ தொலைவு நடந்து, அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்தார்.’

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன.

போஸ்ட்மேன் சிவன்
போஸ்ட்மேன் சிவன்

அரசியல், கலை, சமூக சேவை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கிவருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி‌ ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும்,10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 119 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

போஸ்ட்மேன் சிவன்
போஸ்ட்மேன் சிவன்

இந்தப் பட்டியலில் `மக்களின் தபால்காரர்’ என அழைக்கப்படும் ஓய்வுபெற்ற தபால்காரர் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்காதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரகாஷ் நம்மிடம் பேசுகையில், ``நீலகிரி மாவட்டம், குன்னூர் தபால் அலுவலகத்தில் பகுதிநேர தபால்காரராகப் பணியாற்றிவந்த சிவன், அடர்ந்த காடுகளில் நாள்தோறும் 15 கி.மீ தொலைவு நடந்து, அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவந்தார்.

வழக்கறிஞர் பிரகாஷ்
வழக்கறிஞர் பிரகாஷ்

உண்மையான மக்கள் சேவையாற்றிய சிவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என, இவரது சேவை குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இரண்டாவது முறையாக நினைவூட்டலும் செய்தேன். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இல்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும் பத்ம விருதுகளை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. வாக்குவங்கியைக் கருத்தில்கொண்டே பத்ம விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்" என வேதனை தெரிவிக்கிறார்.

போஸ்ட்மேன் சிவன்
போஸ்ட்மேன் சிவன்

இந்த விவகாரம் தொடர்பாக சிவனிடமே பேசினோம், ``ரிட்டையர்டு ஆகி வீட்ல இருக்கேன் சார். எம்பாட்டுக்கு என் வேலயை செஞ்சுக்கிட்டு இருக்கேன். விருது கிருதுனு எதையும் நான் எதிர்பார்க்குறது கெடையாது" என்கிறார் வெகு யதார்தமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு