Published:Updated:

தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி; ஆனைமலை புலிகள் காப்பக கிராமங்களில் தொடரும் சோகம்!

தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்படும் கர்ப்பிணி

``தொட்டில் கட்டி நீண்ட தூரத்துக்கு தூக்கிச் செல்வதால், உரிய நேரத்துக்குள் மருத்துவமனை செல்ல முடியாமல் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களுக்குட்பட்ட மலைக்கிராமங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.’’

ஆனைமலைப் புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வனச்சரகம் எல்லையில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வசித்தாலும், மலைக் கிராமங்கள் என்பதால் சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இல்லை.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால்கூட 60 கி.மீ-க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி மற்றும் நோயாளிகளைத் தொட்டில் கட்டி தூக்கிக் கொண்டு மருத்துவமனை வருவது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வகையில் குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்கிற கர்ப்பிணிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்தப் பகுதி இளைஞர்கள் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

தொட்டில் கட்டி தூக்கி செல்லப்படும் கர்ப்பிணி
தொட்டில் கட்டி தூக்கி செல்லப்படும் கர்ப்பிணி

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை 6 கி.மீ தொலைவுக்கு பாரம்பர்ய வழித்தடம் உள்ளது. முன்பு அதைத்தான் பயன்படுத்தி வந்தோம். தற்போது அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

ஒவ்வொரு முறையில் தொட்டில் கட்டி நீண்ட தூரத்துக்கு தூக்கிச் செல்வதால், உரிய நேரத்துக்குள் மருத்துவமனை செல்ல முடியாமல் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களுக்குட்பட்ட மலை கிராமங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்

இதனால் சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

75வது சுதந்திர தினத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்; பழங்குடிகளின் இருட்டு மட்டும் இன்னும் விடியவில்லை!