Published:Updated:

திருவண்ணாமலை: விநாயகர் கோயில் நுழைவு வாயிலில் அமர்ந்து மது அருந்திய சாமியார்!- பக்தர்கள் அதிர்ச்சி

மது அருந்திய சாமியார்

திருவண்ணாமலை, கற்பக விநாயகர் கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து சாமியார் ஒருவர் மது குடிக்கும் புகைப்படம் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை: விநாயகர் கோயில் நுழைவு வாயிலில் அமர்ந்து மது அருந்திய சாமியார்!- பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை, கற்பக விநாயகர் கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து சாமியார் ஒருவர் மது குடிக்கும் புகைப்படம் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மது அருந்திய சாமியார்

மிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்களும் வந்து தரிசனம் செய்கிறார்கள்; கிரிவலம் செல்கிறார்கள். அதோடு, கோயில் பின்புறமிருக்கும் மலையைச் சுற்றிலும் நிறைய ஆசிரமங்கள் இருக்கின்றன. அந்த ஆசிரமங்களுக்கும் வெளிநாட்டவர் நிறைய பேர் வந்து தங்குகிறார்கள். இவ்வாறு புகழ்பெற்ற ஆன்மிக நகரமான திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான துறவிகளும் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் கிரிவலப் பாதை மற்றும் அருணாசலேஸ்வரர் கோயில் அருகிலிருக்கும் மடம், ஆசிரமங்கள், பயணியர் தங்கும் விடுதி போன்ற இடங்களில் தங்கியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை கோயில்
திருவண்ணாமலை கோயில்
Picasa

இவர்களுக்கு தினமும் காலை, மாலையில் டீ, மூன்று வேளை உணவு, மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்களால் காவி உடைகள் வழங்கப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் கிரிவலப்பாதையில் சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இவர்களுக்குள், போலி சாமியார்களும் ஊடுருவியிருப்பதாகப் பரபர குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கிரிவலப் பாதையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா அடித்துவிட்டு சாமியார்கள் போர்வையிலிருந்த மோசடிப் பேர்வழிகள் சிலர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். வேடிக்கை பார்த்த பொதுமக்கள்மீதும் கற்களை வீசியெறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நிகழ்வு நடந்த ஓராண்டில், ஆந்திராவைச் சேர்ந்த நிர்வாண சாமியார் யாகம் நடத்தப்போவதாக பரபரப்பைக் கிளப்பினார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். அவ்வளவு ஏன்... கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற போலி சாமியார் ஒருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அதே சமயத்தில், பெங்களூரில் காதலிக்க மறுத்த பெண்மீது ஆசிட் வீசிவிட்டு சாமியார் வேடத்தில் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த நபரையும் போலீஸார் அடையாளம் கண்டு கைதுசெய்தனர். சமீபத்தில், உண்டியலில் நூதன திருட்டில் ஈடுபட்டதாகவும் சாமியார் ஒருவர் பிடிபட்டார்.

மது அருந்தும் சாமியார்
மது அருந்தும் சாமியார்

இந்த நிலையில், திருவண்ணாமலை திருவூடல் தெருவில் திருமஞ்சன கோபுரம் எதிரே அமைந்திருக்கும் கற்பக விநாயகர் கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து சாமியார் ஒருவர் மது குடிக்கும் புகைப்படம் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் மதுபாட்டில், குளிர்பானம், சோடா, மிக்ஸர் ஆகியவற்றை கோயில் படியில் வைத்து, மதுபோதையில் நிலைகுலைந்தபடி சாமியார் காணப்படுகிறார். அந்தக் கோயில் அருகே அமைந்திருக்கும் உயர்மின் கோபுர வெளிச்சத்தில் இந்தக் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் செல்போனில் இந்தக் காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் போலி சாமியார்களைக் களையெடுக்க வேண்டும் என திருவண்ணாமலை மக்களும், ஆன்மிகப் பெரியோர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.