Published:Updated:

`5 கி.மீ சுற்றளவு; 10 அடி உயர சுற்றுச்சுவர்!' - வேகமெடுக்கும் மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள்

இந்தநிலையில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியைத் தற்போது தொடங்கியுள்ளார்கள்.

எய்ம்ஸ் பணிகள்
எய்ம்ஸ் பணிகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜனவரியில் பிரதமர் மோடியால் மதுரையை அடுத்த தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

எய்ம்ஸ் பணிகள்
எய்ம்ஸ் பணிகள்

ஆனால், அதன்பின் அதற்கான வேலைகள் தொடங்காமல் இருந்தன. இது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. இதற்கிடையே இதற்கு நிதி உதவி வழங்க ஜப்பானை சேர்ந்த வங்கிக்குழுவினர் வந்து பார்வையிட்டுச் சென்றனர். `விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான வேலைகளைத் தொடங்க வேண்டும்' என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

தோப்பூரில் தமிழக அரசால், 199.24 ஏக்கர் நிலம் எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மண் பரிசோதனை உட்பட பல்வேறு அடிப்படை வேலைகள் மட்டும் நடந்து வந்தன. எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

எய்ம்ஸ் பணிகள்
எய்ம்ஸ் பணிகள்
என்.ஜி.மணிகண்டன்

இந்தநிலையில், கடந்த 23-ம் தேதி முதல் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான சிலாப்புகள் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர். இதனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இந்தநிலையில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியைத் தற்போது தொடங்கியுள்ளார்கள். 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட சிலாப்புகள் பொருத்தப்பட்ட சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் பணிகள்
எய்ம்ஸ் பணிகள்
என்.ஜி.மணிகண்டன்

19 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணி தொடங்கியுள்ளது. இன்னும் சில நாள்களில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்படும் என்று கூறியுள்ளதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.