Published:Updated:

வெளிச்சந்தையைவிட குறைந்த விலை... வெள்ளாட்டுக் கறி விற்பனை செய்யும் சிறைவாசிகள்!

சிறை அங்காடி
சிறை அங்காடி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சிறைக்குள் கைதிகளால் தயாரிக்கப்படும் இனிப்பு, காரம், பலகாரங்களும் அவர்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளும் சிறைக்கு வெளியே உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய சிறையிலுள்ள கைதிகளின் மன நிலையை மாற்றவும் அவர்களுக்குத் தெரிந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யவும் தமிழக சிறைத்துறை கடந்த சில வருடங்களாக சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

சிறை அங்காடி
சிறை அங்காடி
ஈ.ஜெ.நந்தகுமார்

அந்த வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள மதுரை சிறைச்சாலையில் 3 வருடங்களுக்கு முன்பு சிறை அங்காடி திறக்கப்பட்டது. இதில் சிறைக்குள் கைதிகளால் தயாரிக்கப்படும் இனிப்பு, காரம், பலகாரங்களும் அவர்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகள் சிறைக்கு வெளியே உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் கைதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலம் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் மன அழுத்தம் குறையவும் வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பாகவும், விடுதலை ஆகி வரும்போது இத்தொழிலைத் தொடர ஒரு அனுபவமாகவும் இந்த சிறை அங்காடி உபயோகமாகி வருகிறது.

சிறை அங்காடி
சிறை அங்காடி
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில் மதுரை சிறை அங்காடியில் கூடுதலாக ஆட்டிறைச்சி விற்பனை தொடங்கியுள்ளது. இந்த இறைச்சிக்கடை விற்பனைக்காக சிவகங்கை கிளைசிறை தோட்டத்தில் வெள்ளாடுகள் சுகாதாரமான முறையில் கைதிகளால் வளர்க்கப்படுகின்றன.

அவை மதுரை சிறைக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு ஆடு வெட்டப்படுகிறது. தற்போது விடுமுறை நாள்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 100 கிலோ வரை இறைச்சி விற்பனை ஆகிறது.

சிறை அங்காடி
சிறை அங்காடி
ஈ.ஜெ.நந்தகுமார்

வெளிச் சந்தைகளில் ஆட்டிறைச்சி கிலோ 800 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு 700-க்கு கிடைப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இறைச்சி விற்பனையில் 15 கைதிகள் பணியாற்றி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு