Published:Updated:

`ஒரு மாதத்துக்குள்ளாகவே அடுத்த பாதிப்பு!' -தொடர் கொரோனா தொற்றால் திணறும் தேனி சிறைச்சாலை

தேனி மாவட்டச் சிறை
தேனி மாவட்டச் சிறை

மதுரையில் இருந்துகொண்டு வரப்பட்டு, தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்ட நபருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சத்தில் தேனி மாவட்டச் சிறை! - என்ன காரணம்?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் உள்ளது மாவட்டச் சிறைச்சாலை. கடந்த 7-ம் தேதி, மதுரை சுப்ரமணியபுரம் காவல்நிலைய போலீஸாரால், கொலை முயற்சி வழக்கில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தேனி சிறைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

தேனி மாவட்டச் சிறை
தேனி மாவட்டச் சிறை

இதில், 25 வயது இளைஞர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு மதுரை இராசாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் இருந்த நபர்கள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

`திருமண உறவு முறிவுக்குப் பின் ஏற்பட்ட காதல்..' -தேனி இளைஞரால் தாய், மகளுக்கு நேர்ந்த கொடூரம்

முன்னதாக கடந்த மாதம், மதுரை திடீர் நகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில், 12 இளைஞர்கள் போலீஸாரால், கைது செய்யப்பட்டனர். அவர்களில், 8 பேர் விருதுநகர் மாவட்டச் சிறைக்கும், 4 பேர் தேனி மாவட்ட சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

தேனி மாவட்டச் சிறை
தேனி மாவட்டச் சிறை

தேனிக்குக் கொண்டுவரப்பட்ட நால்வரில், 18 வயது இளைஞர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அறை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தது மாவட்ட நிர்வாகம். முடிவில், தேனி சிறையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டது.

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

இந்நிலையில், இரண்டாவது முறையாக, மதுரையில் இருந்து அழைத்துவரப்பட்ட நபருக்குக் கொரோனா உறுதியான நிலையில், சிறைவாசிகள், அதிகாரிகள் என அனைவரும் கலக்கமடைந்துள்ளனர். மேலும், சிறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு