Published:Updated:

`லேப்டாப் கேட்ட முன்னாள் மாணவர்கள்; தாக்கிய ஆசிரியர் கைது!' - கடலூரில் பரபரப்பு

கடலூரில் மடிக்கணினி கேட்டு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர், ஆசிரியரைத் தகாத வார்த்தையால் திட்டியதால் அவரைத் தாக்கிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி சக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம் ( எஸ்.தேவராஜன் )

கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயின்ட் ஜோசப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு இதுவரை தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. நேற்று இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 5 பேர் பள்ளி முதல்வரிடம் மடிக்கணினி கேட்டுள்ளனர்.

முன்னாள் மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்
முன்னாள் மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்
எஸ்.தேவராஜன்

அதற்கு அவர், `அரசு இன்னமும் வழங்கவில்லை... கொடுத்தால் தருகிறோம்' எனக் கூறி அனுப்பிவிட்டார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் கூச்சலிட்டுச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் பள்ளி வளாகத்தில சத்தமிட்டுச் செல்லக் கூடாது. வெளியே சென்று சத்தமிட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

Vikatan

அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு மாணவர்கள் ஆசிரியரைத் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர், பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள் எனக் கூறி முன்னாள் மாணவரைத் தாக்கியுள்ளார். இதை சக முன்னாள் மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

முன்னாள் மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்
முன்னாள் மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்
எஸ்.தேவராஜன்

மேலும் கடலூர் புதுநகர் போலீஸிலும் புகார் அளித்துள்ளனர், இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து முன்னாள் மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு பள்ளி முன்பு திரண்ட பள்ளி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் கைதைக் கண்டித்தும் பள்ளிக்குச் சம்பந்தமில்லாத மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுத்த முன்னாள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்
எஸ்.தேவராஜன்

சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆசிரியர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து நீண்ட நேரத்துக்குப் பின்பு, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பப்டபோவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.