Published:Updated:

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள எதிர்ப்பு - போராட்டம் அறிவிப்பு

ஆளுநர் ரவி - தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதற்கு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள எதிர்ப்பு - போராட்டம் அறிவிப்பு

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதற்கு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
ஆளுநர் ரவி - தருமபுரம் ஆதீனம்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் நாளை  (19.04.2022) ஞானரத யாத்திரை புறப்படுகிறார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கவிருக்கிறார். ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமனிடம் பேசினோம். ``தமிழ்மொழி, தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காக ஒன்றிய அரசால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும் தீரமானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டுவருகிறார். நீட் தேர்வு, எழுவர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்.எஸ்.எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஓர் ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. எனவே, ஆளுநரைத் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கோருகிறோம். இந்நிகழ்ச்சியில் ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என தருமபுரம் ஆதீனத்துக்கு வேண்டுகோள் விடுத்து மனு அளித்திருக்கிறோம். 

அதையும் மீறி ஆளுநரை அழைத்து ஆதீன நிகழ்ச்சி நடைபெற்றால், மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

செயராமன்
செயராமன்

இது பற்றி மயிலாடுதுறைக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், ``இந்து மதக் கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் தருமபுரம் ஆதீனத்துக்கு, தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்துக்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்துக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிக்கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம்.

கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

தருமபுரம் ஆதீனத்துக்குப் பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கான மசோதாவைக் கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சம்ஸ்கிருத திணிப்பைக்  காரணம் காட்டியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பா.ஜ.க-வுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. தமிழக மாணவர்களை இந்தி படிக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் தமிழக பாஜக-வே அதை எதிர்த்து போராடும்" என்றார்.

இந்நிலையில், "நாளை மயிலாடுதுறைக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாவட்டம் முழுவதும் கறுப்புகொடி காட்டப்படும்; உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும்" என அறிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism