Published:Updated:

ஆன்லைனில் `புதுகை பூபாளம் கலைக்குழு’வின் சமூக நையாண்டி நிகழ்ச்சி! - நீங்களும் ரசிக்கலாம்

ஒரே நாடு ஒரே போடு
ஒரே நாடு ஒரே போடு

`கொரோனா - ஒரே நாடு ஒரே போடு’ என்ற தலைப்பில் ஜூலை 3-ம் தேதி மாலை 6.00 முதல் 7.00 மணிவரை, உங்களை சிரித்து சிந்திக்க வைக்கும் நிகழச்சியை ஆன்லைன் வழியாகவே நடத்த உள்ளனர் புதுகை பூபாளம் குழுவினர்.

வணக்கம் மக்களே..! மூணு மாசத்துக்கும் மேல வீட்டுக்குள்ளயே இருக்கோம். லாக்டெளன், கொரோனா இப்படி பல யோசனைகள், குழப்பங்கள். இதையெல்லாம் கொஞ்சம் தள்ளிவச்சு ரிலாக்ஸாக சிரிச்சு, சிந்திக்க ஒரு செம ஷோ. உங்க வீட்ல இருந்தபடியே நீங்க கலகலப்பா இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம். கொஞ்ச நேரம் உங்க மனசை ரிலாக்ஸாக்கி உங்களை மீண்டும் புத்துணர்வு படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்.

புதுகை பூபாளம்
புதுகை பூபாளம்

இந்தக் கொரோனா காலத்தில் நிகழ்ந்த அரசியல் செயல்பாடுகள், வொர்க் ப்ரம் ஹோம் அலப்பறைகள், அரசு செய்யத் தவறியவை எனப் பலவற்றையும் அலசி ஆராய்ந்து உங்களை சிரித்து சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சியை ஆன்லைன் வழியாகவே நடத்த உள்ளனர் புதுகை பூபாளம் குழுவினர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தங்களின் கருத்தாழமிக்க நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் குழுவினர் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார்கள்.

ஜூலை 3-ம் தேதி மாலை 6.00 முதல் 7.00 மணிவரை!

ஜூலை 3-ம் தேதி மாலை 6.00 முதல் 7.00 மணிவரை புதுகை பூபாளம் கலைக் குழுவின் பிரகதீஸ்வரன், செந்தில் பங்கேற்று அசத்தும் சமூக நையாண்டி நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். அதற்கு கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தவும்.

அடுத்த கட்டுரைக்கு