Published:Updated:

`லீவ் குடுங்க மேடம்; உங்களுக்கு கோயில் கட்டுறோம்!'- கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

`கனமழை மழை காரணமாக விடுமுறை வேண்டும்' என மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மாணவர்கள் மெசேஜ் அனுப்பிய சம்பவம் வைரலாகியிருக்கிறது.

`லீவ் குடுங்க மேடம்; உங்களுக்கு கோயில் கட்டுறோம்!'- கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

`கனமழை மழை காரணமாக விடுமுறை வேண்டும்' என மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மாணவர்கள் மெசேஜ் அனுப்பிய சம்பவம் வைரலாகியிருக்கிறது.

Published:Updated:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தச் சூழலில் காலாண்டு விடுமுறை முடிந்து கடந்த திங்கள்கிழமை 10ம் தேதி பள்ளி திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை விடுமுறை வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாவட்ட ஆட்சியருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்ப தொடங்கியுள்ளனர்.

மாவட்ட அட்சியருக்கு  மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்கள்
மாவட்ட அட்சியருக்கு மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்கள்

இதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. அதில், ``படிச்சு படிச்சு பைத்தியம் பிடிச்சுரும்போல இருக்கு லீவு விடுங்க மேம். மேம் பிளீஸ் லீவு விடுங்க மேம்… உங்களுக்கு கோயில் கட்டுறேன். நாளை மட்டும் லீவு இல்லனா பைத்தியம் ஆயுடுவேன். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன் ஒரு ரெண்டு நாள் லீவ் கொடுத்திங்கனா வீட்டுக்குப் போயிட்டு வந்துருவேன்” என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`80's மற்றும் 90's காலங்களில் எவ்வளவு கன மழை பெய்தாலும் மாணவர்கள் ஆசிரியரிடம் இன்று விடுமுறையா? என்று கேட்கத் தயங்கி தொலைக்காட்சி செய்திகளை உற்றுப்பார்த்தபடி விடுமுறைக்காக காத்திருப்பார்கள். அதிலும் பலருக்கு விடுமுறை என்ற செய்தி அறிவிப்பு வந்தாலும் நேரில் சென்று பார்த்தால் தான் மனதிற்கு திருப்தி என பள்ளி சென்று திரும்பியவர்கள் பலர். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைதளங்கள் அனைவரையும் நெருக்கமாகிவிட்டது. எனவே இன்றைய மாணவர்கள் ஆசிரியர் அல்ல நேரடியாக அவசரகால விடுமுறை அளிக்கும் அதிகாரம் கொண்டவர் யார் என்று தெரிந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடமே மெசேஜ் அனுப்பி விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்' என்று இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.