Published:Updated:

வாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸி'ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்!

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

``2020-ல் மாநில அளவிலான ஓவியப் போட்டியில் நாட்டுப்புறக் கலைகளைத் தத்ரூபமாக ஓவியமாக்கினேன். மாநில அளவிலான அந்தப் போட்டியில் முதலிடம் கிடைத்தது. அப்துல்கலாம் ஐயாவில் தொடங்கி பல தலைவர்களின் ஓவியங்களையும் வரைந்துள்ளேன்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர் குளம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ஓவியராகவும், புகைப்படக் கலைஞராகவும் உள்ளார். இவரின் மகன் ஹரிராஜ் (17), சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார். அப்துல்கலாம் உட்பட பல்வேறு தலைவர்களின் படங்களைத் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

ஹரிராஜ்
ஹரிராஜ்
Vikatan

இந்நிலையில்தான் சமீபத்தில் வாழை இலையில் இந்தியத் தேசிய சின்னத்தை வரைந்தார். அவர் வரைந்த அந்த ஓவியத்தை `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'' நிறுவனம் அங்கீகரித்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ஹரிராஜின் பெயரை இடம்பெற வைத்துள்ளது.

வீட்டின் வரவேற்பறை சுவரில்கூட இயற்கைக் காட்சியை பெயின்ட் மூலம் வரைந்து வைத்துள்ள ஹரிராஜ், தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தன்னுடைய ஓவியப் படைப்புகளை டிஜிட்டலாக்கி வருகிறார்.

இதுபற்றி மாணவர் ஹரிராஜ் நம்மிடம் பேசும்போது, ``அப்பா சுவர் ஓவியம் வரையுற ஆர்டிஸ்ட். சின்ன வயசிலிருந்தே அப்பா வரையுறதை ரொம்ப ஆர்வமா பார்ப்பேன். அந்த ஆர்வம்தான் என்னையும் ஓவியனா மாத்தியிருக்கு. 5-ம் வகுப்பு படிக்கும் போதே ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டேன். பள்ளியில நடக்குற ஓவியப்போட்டியில கண்டிப்பா ஒரு பரிசு வாங்கிடுவேன். 6-ம் வகுப்புப் படிக்கும்போது ஓவிய ஆசிரியர் ஜேம்ஸ் பாண்ட் எனக்கு ஓவியம் வரைவதன் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தாரு. அவரோட பயிற்சிதான் இன்னைக்கு நான் சாதனை செய்யுற அளவுக்கு என்னை மாத்தியிருக்கு.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
ஆணிமீது நின்று பறை வாசிப்பு... கோவை கல்லூரி மாணவி சாதனை!

2020-ல் மாநில அளவிலான ஓவியப்போட்டியில நாட்டுப்புறக் கலைகளைத் தத்ரூபமா ஓவியமாக்கினேன். மாநில அளவிலான அந்தப் போட்டியில முதலிடம் கிடைத்தது. அப்துல்கலாம் ஐயா தொடங்கி பல தலைவர்களின் ஓவியங்களையும் வரைந்திருக்கேன். வழக்கமாக இல்லாமல் இன்னும் ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு எண்ணிதான் வாழை இலையில் இந்திய தேசிய சின்னத்தை வரைந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அனுப்பினேன். அதோடு, மாறிவரும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப என்னுடைய ஓவியங்களையும் டிஜிட்டலில் பதிவேற்றி வர்றேன். தொடர்ந்து, சர்வதேச அளவில் ஓவியத்தில் சாதிக்கணும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு