Published:Updated:

`பசங்க கையெழுத்தையே மறந்துட்டாங்க, அதான்..!' - மாணவர்களின் வீட்டிற்கே சென்று கற்பிக்கும் ஆசிரியை

புதுக்கோட்டை ஆசிரியையின் அசத்தல் முயற்சி
புதுக்கோட்டை ஆசிரியையின் அசத்தல் முயற்சி

``புத்தகம் வாங்குறதுக்காக மாணவர்கள் பலரும் வந்திருந்தாங்க. புக் வாங்கிட்டு கையெழுத்துப் போடும் போது பல மாணவர்களுக்கு கையெழுத்து சரியா இல்லை. சிலர் கையெழுத்தையே மறந்திருந்தாங்க.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் தொடர் ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அரசு சார்பில் ஆன்லைன் வகுப்புகளும், செல்போன் வசதிகள் இல்லாதவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பள்ளியில் ஆசிரியர்களின் தொடர் கண்காணிப்பில் இல்லாததால், பல மாணவர்கள் கையெழுத்தைக் கூட மறக்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.

ஆசிரியை மீனா வகுப்பில் மாணவர்கள்
ஆசிரியை மீனா வகுப்பில் மாணவர்கள்
`டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை அருகே கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன், தன் பள்ளியில் படிக்கும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் செல்கிறார். அங்கு மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடித்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வருகிறார். டூவிலரில் பல கி.மீ தூரம் பயணம் செய்து, மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த ஆசிரியையின் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியிலும், சக ஆசிரியர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுபற்றி ஆசிரியை மீனா ராமநாதனிடம் பேசினோம்.

``இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால பள்ளிக்கூடத்துக்குப் புத்தகம் வாங்குறதுக்காக மாணவர்கள் பலரும் வந்திருந்தாங்க. புக் வாங்கிட்டு கையெழுத்துப் போடும் போது பல மாணவர்களுக்கு கையெழுத்து சரியா இல்லை. சிலர் கையெழுத்தையே மறந்திருந்தாங்க. கல்வித் தொலைக்காட்சியையே பலர் பார்ப்பதில்லை. படிப்பையும் மறந்துட்டாங்க. இதையெல்லாம் பார்த்து ரொம்ப சங்கடமா போச்சு. எப்படியாவது நம்ம பிள்ளைகளைப் பழைய நிலைக்குத் திரும்பி கொண்டு வந்திடணும்னு தோணுச்சு.

ஆசிரியை மீனா வகுப்பில் மாணவர்கள்
ஆசிரியை மீனா வகுப்பில் மாணவர்கள்
2G மொபைலிலேயே இயங்கும் ஆன்லைன் கல்வி ரேடியோ; அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி!

அப்பதான், பிள்ளைங்க வீடுகளுக்கே தேடிச் சென்று பாடம் எடுக்கலாம்ங்கிற ஐடியா வந்துச்சு. ஆனா, கொரோனா பிரச்னை நேரத்துல நாம போய் பாடம் எடுக்க முடியுமா, நிறைய பிள்ளைங்க வந்துட்டா என்ன பண்றதுனு எல்லாம் யோசிச்சப்ப, கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், எப்படியாவது பிள்ளைகளைப் பார்த்துப் பேசிடணும்னு தோணுச்சு. அதனால டூவிலரை எடுத்துக்கிட்டு பிள்ளைகளைத் தேடிக் கிளம்பிட்டேன். என்னைய பார்த்ததுமே பிள்ளைங்களுக்கும், அவங்க பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி. பாடம் எடுக்கப் போறேன்னு சொன்னதும் ஆர்வமாகிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வகுப்பு நடத்தும்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்ல ரொம்பவும் கவனமா இருக்கணும்ங்கிறத மட்டும் மனசுல வெச்சுக்கிட்டேன். பிள்ளைங்கள சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைக்கிறது, சானிட்டைசர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வைக்கிறதுல எல்லாம் ரொம்பத் தெளிவா இருந்தேன். பிள்ளைங்க அதிகமா இருந்தா, அந்த ஊர்லேயே 3 குழுவாக பிரிச்சு பாடம் எடுத்துக்கிட்டு வர்றேன். இப்போ, பெற்றோர்கள் மத்தியில ரொம்ப வரவேற்பு இருக்கு. எங்க பிள்ளைங்க எல்லாம், தனியார் பள்ளியில படிக்கிற பிள்ளைங்க சிலரையும் கிளாஸ்க்கு கூட்டிக்கிட்டு வந்து, அவங்களுக்கும் கிளாஸ் எடுக்கணும்னு அன்புக் கட்டளையா சொல்றாங்க.

ரிசுகளை வழங்கும் ஆசிரியை மீனா
ரிசுகளை வழங்கும் ஆசிரியை மீனா

அன்புக்காக அவங்களுக்கும் சேர்த்துப் பாடம் எடுத்துட்டு வர்றேன். ரொம்ப நாள் பிள்ளைங்க முகத்தையே பார்க்காம இருந்துட்டு இப்போ பார்த்துப் பாடம் எடுக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கவரப்பட்டி பரவல், கோட்டைக்காரன் பட்டி, மந்தினிப்பட்டி, மனப்பட்டித் தெரு, ஒரத்திக்காடுன்னு பள்ளியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்குப் பயணிச்சிக்கிட்டு இருக்கேன். எங்க மாவட்ட கல்வி அலுவலர் அம்மா எனக்கு வாழ்த்துகள் தெரிவிச்சிருக்காங்க. சக ஆசிரியர்களும், அதிகாரிகளும் பாரட்டுகளைத் தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பாராட்டுகளுக்கு எல்லாம் நியாயம் செய்யணும்னு நானும் என் மாணவர்களும் மாஸ்க் போடுறது, சானிட்டைசர் பயன்படுத்துறதுனு ரொம்ப கவனமா இருக்கோம். மேலும், வகுப்புக்கு ஆர்வமா வர்ற மாணவர்களை ஊக்குவிக்க சிறப்பா பங்களிக்கிறவங்களுக்கு பேனா, பென்சில்னு என்னால முடிஞ்ச பரிசுகளையும் கொடுத்துக்கிட்டு வர்றேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு