Published:Updated:

`டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

``கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்துப் பயனடையும் மாணவர்களை, அதைத் தொடர்ந்து பார்த்துப் பயன்பெற ஊக்கப்படுத்தும் வகையில் நேரடியாக மாணவர்களின் வீட்டுக்கே சென்று அவர்களுக்குப் பரிசு கொடுத்து ஊக்குவித்து வருகிறோம்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சியில் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்களை இங்குள்ள தலைமையாசிரியர் உட்படப் பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்களா என்பதைக் கண்காணித்தும், பாடங்களை மாணவர்களுக்கு வீடியோக்களாகவும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியும் தொடர்ந்து படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் மாணவர்கள் அனைவரையும் ஆர்வமுடன் பாடங்களைப் படிக்க வைக்க, ஆசிரியர்கள் தற்போது மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

பரிசு அளிக்கும் ஆசிரியர்
பரிசு அளிக்கும் ஆசிரியர்
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

இதுபற்றித் தலைமையாசிரியர் ஆண்டனி கூறும்போது, ``எங்கள் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவதற்காகவும், இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காகவும் `தருவோம் - பெறுவோம் திட்டம்', `ரயில் பெட்டி வகுப்பறை' என்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது மாணவர்கள் எங்களுடைய பார்வையில் நேரடி கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், பெற்றோர் மூலம் அவர்களின் கற்றல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறோம்.

பாடங்களை நாங்கள் வீடியோவாகத் தயாரித்து அசைன்மென்ட்களாக வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறோம். கல்வித் தொலைக்காட்சியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதைப் பல மாணவர்கள் பார்த்துப் பயன்பெறுகின்றனர். ஆனாலும், ஒரு சில மாணவர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.

அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையிலேயே தற்போது, யாரெல்லாம் கல்வித் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கிறார்கள், ஆசிரியர்களால் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் அசைன்மென்ட்களை யாரெல்லாம் சரியாகவும் ஒழுங்காகவும் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பரிசுகள் கொடுக்க முடிவு செய்தோம்.

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

அதன்படி, பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் அனைவரும் நேரடியாகச் சென்று பரிசுகளை வழங்கி வருகிறோம். இதனால், பரிசின் மீது ஏற்படும் ஆர்வம் மற்ற மாணவர்களையும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்க வைக்கும். பள்ளியின் அனைத்து மாணவர்களும் பரிசு வாங்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு