Published:Updated:

`இது கொரோனா ஜிமிக்கி!' -புதுக்கோட்டை நகைக்கடை உரிமையாளரின் புதிய முயற்சி

கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மல்
கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மல்

`பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ஜிமிக்கி கம்மலை செஞ்சேன். விளம்பரத்திற்காக கொரோனா கம்மலைத் தயாரிக்கவில்லை' என்கிறார் நகைக்கடை உரிமையாளர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியர் சங்கத்தினர், வைரஸின் அமைப்பைப் போன்று சாலையில் பிரமாண்ட ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதேபோல், புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை வைத்திருக்கும் வீரமணி என்பவர், தங்கத்தில் கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மலைத் தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார். இவர் தயாரித்த கொரோனா ஜிமிக்கி கம்மலுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மல்
கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மல்

இதுபற்றி வீரமணி கூறும்போது, " நான் நகைக் கொல்லர் என்பதால், முதலில் கொரோனாவின் அமைப்பை தொலைக்காட்சியில் பார்த்ததுமே எனக்கு ஜிமிக்கி கம்மல் செய்யலாம்னு தோணுச்சு. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா பாடல், கொரோனா ஓவியம், கொரோனா தங்க முகக்கவசம்னு பலரும் செய்யிறாங்க.

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ஜிமிக்கி கம்மலை செஞ்சிருக்கேன். விளம்பரத்திற்காகவும் வியாபார யுக்திக்காகவும் கொரோனா கம்மலைத் தயாரிக்கவில்லை. இரண்டு ஜிமிக்கி கம்மலும் சேர்த்து 4 கிராம் எடையுள்ளவை.

அச்சுறுத்தும் டிக்-டாக் வீடியோ டு கொரோனா தடுப்புப் பணி! - புதுக்கோட்டை இளைஞரை மாற்றிய இன்ஸ்பெக்டர்

இதனைப் பார்த்த பெண்கள் பலரும், கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மல் செஞ்சு கொடுக்கச் சொல்லி அதிக அளவில் ஆர்டர் கொடுக்கிறாங்க. கொரோனா முற்றிலும் ஒழிய வேண்டும், மாஸ்க் அணியாத சூழல் உருவாகணும். மாஸ்க் அணியாத முகங்களில் இந்தக் கொரோனா கம்மல் கிடப்பதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு