Published:Updated:

``என் காதலி என்னைத் தேடி வந்திடுவா!" - 21 ஆண்டுகளாகப் பாறையில் வாழ்க்கையைக் கழிக்கும் இளைஞர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாறையில் வாழ்க்கையைக் கழிக்கும் இளைஞர்
பாறையில் வாழ்க்கையைக் கழிக்கும் இளைஞர்

``திடீர்னு ஒரு நாள் எங்ககிட்ட சொல்லாம ஊருக்குக் கிளம்பி வந்துட்டான். கையோட ஒரு பொம்பளப் புள்ளைய, காதலிக்கிறதா சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்துட்டான். எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னப்ப..."

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சாயி. இவரின் மகன் நாகராஜன் (40). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பிரிந்து சென்ற தன் காதலி எப்படியும் மீண்டும் வந்துவிடுவார் எனக் கடந்த 21 வருடங்களாக, ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள ஒரு பாறையில் தங்கி வாழ்க்கையைக் கழித்து வருகிறார். நாகராஜனுக்கு அவரின் தாய் நஞ்சாயி தினமும் தவறாமல் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து வருகிறார். நாகராஜன் ஊர் மக்கள் யாருக்கும், எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை. நாகராஜனுக்கு என்ன ஆனது, ஏன் வீட்டைவிட்டு வெளியேறி பாறையில் தங்கி வாழ்க்கையைக் கழிக்கிறார் என்ற நம் கேள்விகளுக்குப் பின், ஒரு காதல் தோல்விக் கதை விரிகிறது.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay
`காதல் தோல்வி, இருட்டைத் தேடுகிறான் என் நண்பன்'-வாசகரின் கேள்விக்கு மருத்துவரின் பதில் #NoMoreStress

நாகராஜனின் தாய் நஞ்சாயியிடம் பேசினோம்.

``எனக்கு மூணு ஆம்பளப் புள்ளைங்க, ரெண்டு பொம்பளப் புள்ளைங்க. மூணாவது பையன்தான் நாகராஜன். இவனுக்கு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்தேன். படிப்பு மண்டையில ஏறலைங்கிறதால, கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போறேன்னு சொன்னான். போகட்டும்னு விட்டுட்டோம். அங்க ஒரு மளிகைக் கடையில வேலைபார்த்தான். பணம், காசு எல்லாம் ஊருக்கு அனுப்புவான். நல்லாத்தான் வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். திடீர்னு ஒரு நாள் எங்ககிட்ட சொல்லாம ஊருக்குக் கிளம்பி வந்துட்டான். கையோடு ஒரு பொம்பளப் புள்ளையை, காதலிக்கிறதா சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்துட்டான்.

எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கனு அவன் சொன்னப்ப எங்களுக்கு ஒரே அதிர்ச்சியாகிருச்சு. பொண்ணுக்குக் கேரளா பக்கம் ஏதோ ஒரு ஊரு. அவங்க சொந்தக்காரங்க, தேடிக் கண்டுபிடிச்சு வந்து அந்தப் பெண்ணை அழைச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. பிரிய மனசில்லாமதான் அந்தப் பொண்ணும் போச்சு.

அப்புறம் அந்தப் பெண்ணுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகிட்டதா சொல்றாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியலை. ஆனா, காதல் தோல்வியை என் மகனால ஏத்துக்க முடியலை. அவனுக்குள்ள ஏற்பட்ட மனக்குழப்பம் அவன பிரம்மை புடிச்சவன் போல ஆக்கியிருச்சு. அவனை எப்படியாவது சரிபண்ணணும்னு போகாத ஊர் இல்ல, பண்ணாத இயற்கை வைத்தியம் இல்ல. ஆனா, எந்த முன்னேற்றமும் இல்ல.

அதுக்கு அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போனவன், `நான் வீட்டுக்கு வர மாட்டேன். எப்படியும் இந்த வழியா என் காதலி என்னைத் தேடி வந்திடுவா'னு சொல்லி ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்க பாறையிலயேதான் இருப்பான்.

பாறையில் வாழ்க்கையைக் கழிக்கும் இளைஞர்
பாறையில் வாழ்க்கையைக் கழிக்கும் இளைஞர்
`காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1

மழை, வெயில்னு கடந்த 21 வருஷமா அந்தப் பாறையிலதான் அவனோட வாழ்க்கை ஓடுது. எத்தனையோ முறை வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டிருக்கேன். ஆனா, வரமாட்டான். தனிமையா இருக்க விரும்புறான்னு நெனச்சு விட்டுட்டோம். ஆனாலும் பெத்த மனசு... எப்படி விட முடியும்? சாப்பிட்டானோ என்னமோனு மனசு துடிக்கும். அதனால, மூணு வேளையும் 1 கி.மீ நடந்து போய் அவனுக்குச் சாப்பாடு கொடுத்திடுவேன். மனநல பாதிப்பு இருந்தாலும், ஊர்க்காரங்க யாருக்கும் அவன் எந்தப் பிரச்னையும் கொடுக்க மாட்டான். ஒரு டீ வாங்கிக் குடிக்கக் கடைப்பக்கம் போக மாட்டான். எல்லாத்தையும் அவனுக்குள்ளே போட்டு பொதைச்சு வச்சு வருஷத்தையும் ஓட்டிட்டான்.

எங்களால முடிஞ்ச வைத்தியம் செஞ்சு பார்த்தும் அவனை பெருசா மாத்த முடியல. முன்னாடி இருந்ததுக்கு இப்ப கொஞ்சம் அவன்கிட்ட முன்னேற்றம் தெரியுது. என்னைக்காவது ஒரு நாள் சரி ஆகிடுவான்னு நாங்க காத்துக்கிட்டு கெடக்கோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு