Published:Updated:

புதுக்கோட்டை மெய்வழிச் சாலையில் சமத்துவப் பொங்கல் விழா! - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையோடு ஒன்றுகூடி விழாவைக் கொண்டாடினர்.

பொங்கல் விழா!
பொங்கல் விழா!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய் வழிச்சாலை கிராமத்தில், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் பொங்கல் விழா, கிராம மக்களால் ஒன்றுசேர்ந்து சமத்துவப் பொங்கல் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. மெய் வழிச்சாலையைச் சேர்ந்தவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், பொங்கல் நாளில் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகின்றனர். மக்கள் அனைவரும் மத, சாதி பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழும்போது அவர்களுக்கு சொர்க்க பிராப்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை மெய்வழிச் சாலையில் நிலவுகிறது.

பொங்கல் விழா!
பொங்கல் விழா!

இதற்காகவே மெய் வழிச்சாலை என்பது தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் பொங்கல் விழா சிறப்பு வாய்ந்ததாகும். மெய்வழிச் சாலையில், இந்த ஆண்டு 119-வது பொங்கல் விழா வழக்கம்போல் பொன்னரங்கத் தேவாலயத்தில் தொடங்கப்பட்டது. தேவாலயத்திலிருந்து ஊர்வலமாக தீப்பந்தம் எடுத்து வரப்பட்டு, அங்குள்ள கொடிமரத்தை 3முறை சுற்றிவந்த பிறகு, தீப்பந்தத்தை மேலே கட்டினர்.

அனைவரும் நீண்ட வரிசையில் பொங்கல் பானை வைத்து அடுப்பை மூட்டி, 'பொங்கலோ... பொங்கல்' என்று கூறி உற்சாகத்துடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் பாரம்பர்ய உடையான பஞ்சகச்சம், தலைப்பாகை அணிந்து பொங்க விழாவைக் கொண்டாடினர்.

பொங்கல் விழா!
பொங்கல் விழா!

பொங்கல் வைத்து முடிந்ததும், ஒவ்வொரு பானையிலிருந்தும் ஒரு கரண்டி பொங்கலை எடுத்த சபைக்கரசர், மொத்தமாக ஒரு இடத்தில் வைத்தார்.