Published:Updated:

ஊரடங்கில் கோயில் திருவிழாக்களுக்கு தடை; விளையாட்டாக திருவிழா நடத்தி வைரலான புதுக்கோட்டை சிறுவர்கள்!

விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழும் புதுக்கோட்டை சிறுவர்கள்
விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழும் புதுக்கோட்டை சிறுவர்கள்

``இப்போ, பள்ளிக்கூடத்துக்கும் விடுமுறை விட்டுட்டாங்க. திருவிழா நடக்கலைங்கிற ஏக்கத்துல திருவிழா நடப்பது போலவும், பால்குடம், காவடி எடுத்து ஆடிப் பாடிக்கிட்டும் இருக்காங்க." - விராலிப்பட்டி மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பங்குனி துவங்கி சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் எல்லாம் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக ஆடி மாதத்தில் பெரும்பாலான கோயில்களில் பூச்சொரிதல் விழா, பாளையெடுப்பு, குதிரை எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில்தான், தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்களில் ஊர்கூடி திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.

வீடியோவில் நடனமாடும் சிறுவர்கள்
வீடியோவில் நடனமாடும் சிறுவர்கள்
2K kids: க்ளாஸு..! குளோஸு..?

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை அருகே விராலிப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பலரும் பால்குடம், காவடி எடுப்பது போல ஆட்டம், பாட்டத்துடன் சாலையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இதனை அந்தப் பகுதி இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விட, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுபற்றி விராலிப்பட்டியை கிராம மக்களிடம் பேசினோம்.

``வழக்கமா ஆடி பிறந்துட்டாலே அம்மன் கோயில்கள்ல திருவிழாக்கள் நடைபெறும். சில இடங்கள்ல கிடா விருந்தும் நடக்கும். ஆனா, இப்போது ஆடி பிறந்தும் கோயில்கள்ல வழக்கமான பூஜைகள் மட்டுமே நடக்குது. திருவிழாக்கள நடத்த அனுமதியில்ல. கொரோனா பிரச்னையால கிட்டத்தட்ட 2 வருஷத்துக்கும் மேல திருவிழாக்கள் நடத்தப்படல.

திருவிழான்னாலே சிறுவர்களைச் சொல்லவே வேணாம். குஷியாகிடுவாங்க. எங்க ஊரைப் பொறுத்தவரை திருவிழாக்கள் வந்துட்டாலே சிறுவர்களுக்குப் பால்குடம், காவடி எடுப்பதுனு அவங்களை பழக்கப்படுத்திட்டோம். இப்போ, பள்ளிக்கூடத்துக்கும் தொடர்ச்சியா விடுமுறை விட்டுட்டாங்க.

விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழும் புதுக்கோட்டை சிறுவர்கள்
விளையாட்டாக திருவிழா நடத்தி மகிழும் புதுக்கோட்டை சிறுவர்கள்
2K kids: ஷாப்பிங் ஏரியாவில் காலேஜ்... தினம் தினம் திருவிழா!

திருவிழா நடக்கலைங்கிற ஏக்கத்துல அவங்களாகவே திருவிழா நடப்பது போலவும், பால்குடம், காவடி எடுத்து ஆடிப் பாடிக்கிட்டும் இருக்காங்க. எப்படியோ அவங்க சந்தோஷமா ஆடிப்பாடி, விளையாண்டா சரிதான். அதே நேரத்துல இந்த கொரோனா நேரத்துல இனிமே கூட்டமா சேர்ந்து விளையாடக் கூடாதுனும் அவங்களுக்குத் தடை போட்டுட்டோம்" என்றார்கள்.

கொரோனா சூழலாக இருந்தால் என்ன... குழந்தைகள் உலகில் எப்போதும் சந்தோஷம் வளர்பிறைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு