Published:Updated:

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 மீனவர்கள் கைது! - தொடரும் இலங்கை கடற்படையின் கைது

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 87 விசைப்படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தமிழ்ச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சிலர் 22 நாட்டிகல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், விஜி, தினேஷ், ரஞ்சித், பக்கிரிசாமி, கமல், புனுகு, கார்த்திக் உள்ளிட்ட எட்டு மீனவர்களையும் படகுடன் சிறைப்பிடித்து விசாரணைக்காக இலங்கை காரைநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 மீனவர்கள் கைது! - தொடரும் இலங்கை கடற்படையின் கைது

எட்டு மீனவர்களை ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையினர் கைதுசெய்திருப்பது ஜெகதாப்பட்டினம் மீனவ கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்வது தொடர்கதையாகிவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.