Published:Updated:

புதுக்கோட்டை: `கொரோனாவுடன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகன்!' - நெகிழவைத்த மருத்துவர்கள்

கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்
கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்

பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்துகொண்ட அந்த இளைஞர் உறவினர்கள் யாருடனும் நெருங்காமல் தந்தையின் இறுதிச்சடங்குகளை மட்டும் செய்துவிட்டுப் பாதுகாப்புடன் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டைப் பழைய மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவரின் தந்தை தமிழரசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார். தமிழரசனுக்கு அந்த இளைஞர் ஒரே மகன். இறுதிச்சடங்குகளை மகன்தான் முன்னின்று செய்ய வேண்டும். தந்தையின் மரணம் குறித்து அந்த இளைஞருக்குத் தகவல் கிடைக்கிறது.

கவச உடை அணிந்து இறுதி சடங்கு செய்யும் மகன்
கவச உடை அணிந்து இறுதி சடங்கு செய்யும் மகன்

மனமுடைந்த அந்த இளைஞர், ``தந்தையின் முகத்தைக் கடைசியாக ஒருமுறையாவது பார்த்துவிட்டால் போதும் என்று கதறி அழுதுள்ளார். அருகே இருந்தவர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும், தந்தை இறந்த சோகத்திலேயே மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, மனநல மருத்துவர் இளைஞருக்கு ஆலோசனை கூறினார். இளைஞரோ தந்தையின் இறுதிச்சடங்கினை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்தனர். அந்த இளைஞரை நிபந்தனைகளுடனும் பாதுகாப்புடனும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதித்தனர். பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்துகொண்ட அந்த இளைஞர், உறவினர்கள் யாருடனும் நெருங்காமல் தந்தையின் இறுதிச்சடங்கைச் செய்துவிட்டுப் பாதுகாப்புடன் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இளைஞரின் கடைமையைச் செய்ய உதவிய மருத்துவர்களின் மனிதநேய செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்
கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்

இதுபற்றி மனநல மருத்துவர், மாவட்ட கொரோனா தடுப்பு தொடர்பு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் கூறும்போது, ``கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் அவரின் தந்தை இறப்பு அந்த இளைஞருக்குக் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தது. அதுவும், தந்தையின் இறுதிச்சடங்கை அவரால் செய்ய முடியாமல் போனால், இறுதிக் காரியங்களை அப்பாவுக்குச் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

`அவரை நம்பி வரும் ஏழைகளுக்குதான் இழப்பு!' - கொரோனா பலிகொண்ட கோவை நரம்பியல் மருத்துவர்

இனி அவருக்கு அந்தக் குற்ற உணர்ச்சி இருக்காது. அந்த இளைஞரும் குடும்பத்தினரும் இறுதிச்சடங்கு செய்ய கோரிக்கை வைத்தனர். உடனே, மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசித்து, பாதுகாப்புடன் அனுப்பலாம் என்ற முடிவை எடுத்தோம். உள்ளூர் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். முழுமையாகக் கண்காணித்தனர். கூட்டு முயற்சியால்தான் பாதுகாப்புடன் அவரை கலந்துகொள்ள வைக்க முடிந்தது.

கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்
கவச உடை அணிந்து இறுதிச் சடங்கு செய்யும் மகன்

அதற்கேற்ப அந்த இளைஞரும் அஶ்ரீன் குடும்பத்தினரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல்பட்டனர். மனிதநேயம் அடிப்படையில் மட்டுமே அந்த இளைஞருக்கும் குடும்பத்துக்கும் இந்த உதவியைச் செய்திருக்கிறோம். இதுபோன்ற சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே அனுப்பலாம். மற்ற நிகழ்வுகளுக்காக எல்லாம் கண்டிப்பாகக் கொரோனா நோயாளியை அனுப்ப முடியாது. அனுப்பவும் மாட்டோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு