Published:Updated:

``பார்டர்ல இருந்து10 கி.மீ நடந்தே வந்தோம்!'' - உக்ரைனிலிருந்து அறந்தாங்கி திரும்பிய மாணவி

செல்வபிரியா

``10 கி.மீ தூரம் வரைக்கும் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு, குளிர் நடுக்கத்துல ரொம்ப சிரமப்பட்டுத்தான் போய் சேர்ந்தோம். ரொமானியால இருந்து டெல்லிக்கு ஃபிளைட் ஏறின பிறகு கிட்டத்தட்ட 3 நாளைக்குப் பிறகுதான் நல்ல சாப்பாடே சாப்பிட்டோம்.''

``பார்டர்ல இருந்து10 கி.மீ நடந்தே வந்தோம்!'' - உக்ரைனிலிருந்து அறந்தாங்கி திரும்பிய மாணவி

``10 கி.மீ தூரம் வரைக்கும் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு, குளிர் நடுக்கத்துல ரொம்ப சிரமப்பட்டுத்தான் போய் சேர்ந்தோம். ரொமானியால இருந்து டெல்லிக்கு ஃபிளைட் ஏறின பிறகு கிட்டத்தட்ட 3 நாளைக்குப் பிறகுதான் நல்ல சாப்பாடே சாப்பிட்டோம்.''

Published:Updated:
செல்வபிரியா

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா மெள்ள மெள்ள கைப்பற்றி வருகிறது. இதற்கிடையே, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களை, இந்தியா அழைத்து வரும் பணிகளை இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.

தமிழகத்திலிருந்து உக்ரைனுக்கு படிப்பதற்காகச் சென்ற மாணவர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான், மாணவி செல்வப்ரியா இப்போது இந்தியா திரும்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வளையல்கார தெருவைச் சேர்ந்தவர் விவேக். இவரின் மகள் செல்வப்பிரியா, உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். போர்ச் சுழலில், தற்போது பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறார்.

வீடு திரும்பிய மாணவர்கள்
வீடு திரும்பிய மாணவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவி செல்வப்பிரியாவிடம் பேசினோம். ``உக்ரைன்ல, செர்னிவ்சி நகரத்துல தங்கிப் படிச்சேன். போர் தொடங்கியவுடனேயே எங்களுக்கும் அலர்ட் கொடுத்துட்டாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டோம். அதுக்கப்புறம்தான் சுதாரிச்சு கிளம்பினோம். பஸ் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நாங்க இருந்த இடத்திலிருந்து ரொமானியா பார்டர் வரைக்கும்தான் எங்களால பஸ்ல போக முடிஞ்சது. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 10 கி.மீ தூரம் வரைக்கும் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு குளிர் நடுக்கத்துல ரொம்ப சிரமப்பட்டுத்தான் போய் சேர்ந்தோம்.

ரொமானியால இருந்து டெல்லிக்கு ஃபிளைட் ஏறின பிறகு, கிட்டத்தட்ட 3 நாளைக்குப் பிறகுதான் நல்ல சாப்பாடே சாப்பிட்டோம். எல்லா இடத்துலயும் இந்திய தேசியக்கொடி பயன்படுத்தியதாலதான் நாங்க தப்பிச்சோம். இந்தியர்கள்னு தெரிஞ்சா பெரும்பாலும் நம்ம மேல தாக்குதல் நடத்தமாட்டாங்க. நாங்க 600 பேர் வரையிலும் வந்தோம். யார் மீதும் தாக்குதல் நடத்தப்படல.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கீவ், கார்கீவ் எல்லாம் உக்ரைனோட முக்கிய நகரங்கள். இங்கதான் இந்திய மாணவர்கள் அதிகம் பேர் படிக்கிறாங்க. இந்த இடங்கள்லதான் இப்போ போர் தீவிரமடைந்திருக்கு. இங்க உள்ள மாணவர்கள் பெரும்பாலும் பதுங்குக் குழிக்குள்ளதான் இருக்காங்க. இவங்களைதான் மொதல்ல வெளியில மீட்டு வரணும்.

நாங்க இருந்தது ரொமானியா பார்டர். அங்கயிருந்து வெளியேற எங்களுக்குக் கொஞ்ச தூரம்தான். ஆனா, கார்கீவ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில உள்ளவங்க, மேற்கு நோக்கி வர்றது கஷ்டம். அந்த மக்கள்தான் மாட்டிக்கிட்டுத் தவிக்கிறாங்க. அந்த ஊர்கள்ல என்னோட நண்பர்கள் சிலர் இருக்காங்க. நான் இங்க வந்ததுலயிருந்து அவங்களைத் தொடர்புகொண்டு, நான் எப்படி நம்மளோட தூதரகத்தை தொடர்புகொண்டேன், அவங்க என்ன உதவி செஞ்சாங்க, எப்படி வந்தேன், என்னென்ன தேவைப்பட்டுச்சுனு எல்லாம் சொல்லி அவங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறதோட, ஆலோசனைகளையும் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

நடந்து வரும் மாணவர்கள்
நடந்து வரும் மாணவர்கள்

கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு நல்ல சேதி கிடைச்சது. கார்கீவ்ல இருக்குற என்னோட நண்பர் அஜய்கிட்ட பேசினேன். அவங்க பஸ் மூலமா ரஷ்யா, மாஸ்கோவுக்குப் போய் அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படப்போவதா சொல்லிருக்காங்கன்னு சொன்னார். இப்பதான் கொஞ்சம், நிம்மதியா இருக்கு.

நாங்க வீடு வந்து சேர்ற வரைக்கும் கன்சல்டன்ஸியும், இந்தியன் எம்பஸியும் எங்களை ரொம்பவே நல்லா பார்த்துக்கிட்டாங்க. பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துட்டாங்க. எங்களை மாதிரி எல்லா மாணவர்களையும் பத்திரமா கொண்டு வந்திடுவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism