Published:Updated:

`அதிகாரிகள் நடத்தலை; அதான் நாங்க நடத்துறோம்!' - இளைஞர்கள் முன்னெடுத்த மக்கள் கிராம சபை

மக்கள் கிராம சபைக் கூட்டம்
News
மக்கள் கிராம சபைக் கூட்டம்

``சுமார் ரெண்டு வருஷத்துக்கும் மேலாக கொரோனா பிரச்னையால நடக்காம இருந்த கிராம சபைக் கூட்டம் அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்போகிறதா சொன்னாங்க. எல்லாரும் ரொம்ப எதிர்பார்ப்போடு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா, அரசு அதிகாரிகள் எல்லாரும் வராம போயிட்டாங்க."

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், அம்மா பட்டினத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், அதிகாரிகள் யாரும் வராததால், ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளைக் கொண்டு ஒரு மாத காலத்துக்குள் சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, கிராம சபைக் கூட்டத்தை மக்கள் ஒத்தி வைத்தனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிகாரிகள், கிராம சபைக் கூட்டத்தை நடத்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

கிராம நலன் சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்து வரும் அம்மாபட்டினத்தின் பொதுநல இளைஞர் பேரவை அமைப்பினர், ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடத்த ஊராட்சியை வலியுறுத்தினர். இக்கோரிக்கையை துறை அலுவலர்கள் கவனத்துக்கும் எழுத்துபூர்வமாக மனுக்களாக எடுத்துச் சென்றனர்.

மக்கள் கிராம சபைக்கூட்டம்
மக்கள் கிராம சபைக்கூட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி, அதிகாரிகளைக் கண்டித்து, மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர்.

இதுபற்றி அம்மாபட்டினம் பொதுநல இளைஞர் பேரவையினரிடம் பேசினோம். ``சுமார் ரெண்டு வருஷத்துக்கும் மேலாக கொரோனா பிரச்னையால நடக்காம இருந்த கிராம சபைக் கூட்டம் அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்போகிறதா சொன்னாங்க. எல்லாரும் ரொம்ப எதிர்பார்ப்போடு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா, அரசு அதிகாரிகள் எல்லாரும் வராம போயிட்டாங்க. அதிகாரிகளைக் கண்டிச்சும், ஒரு மாதத்துக்குள்ள சிறப்புக் கூட்டம் நடத்தணும்னு மக்கள் எல்லாம் சேர்ந்து தீர்மானம் போட்டோம். சிறப்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டக்கோரி ஊராட்சி மன்றத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குநர்னு எல்லா அதிகாரிகளுக்கும் பல முறை மனுக்கள் அனுப்பியும், எங்களோட மனுக்களை கண்டுக்கிடலை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எங்களோட கோரிக்கையை மட்டுமல்லாம, கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானத்தையும் அதிகாரிகள் அலட்சியப் படுத்தியிருக்காங்க. கிராம சபைக் கூட்டங்களை, அரசின் அல்லது ஊராட்சி ஆய்வாளர்களின் முன் அனுமதி வாங்காம ஊராட்சி மன்றத் தலைவர்கள், தன்னிச்சையா எத்தனை முறை வேணும்னாலும், கூட்டிகக்கலாம்னு சமீபத்துல உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கு. இந்த உத்தரவின் பேரிலாவது, கூட்டத்தை நடத்தக்கோரி ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எங்களை அலட்சியப்படுத்தியதோட, அரசுக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் ஊராட்சி மன்றத்தையும், அரசு அதிகாரிகளையும் கண்டித்து மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தியிருக்கோம்.

மக்கள் கிராம சபை தீர்மானங்கள்
மக்கள் கிராம சபை தீர்மானங்கள்

இதற்கிடையில்தான் புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநருக்கு (ஊராட்சிகள்) நாங்க அனுப்பிய மனுவுக்கு, `கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும், அரசின் உத்தரவு இல்லாமல் கூட்ட முடியாதுன்'னு பதில் கடிதம் அனுப்பியிருக்காங்க. நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான கருத்தை அனுப்பியிருக்காங்க. பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று வரும் கிராமசபைக் கூட்டங்களை முடக்கும் முயற்சியாதான் நாங்க பார்க்கிறோம். இது கண்டிக்கத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அன்னைக்கு எதிர்க்கட்சித் தலைவரா இருந்தப்ப, நடத்திய கூட்டம் போல நாங்க இந்தக் கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கோம். ஏராளமான பெண்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புது முயற்சியா மக்கள்கிட்ட மனு வாங்குற பாக்ஸ் ஒண்ணு வச்சோம். அதுல மக்கள் தங்கள் கோரிக்கைகளைப் போட்டிருக்காங்க. அத முதலமைச்சர்கிட்ட கொண்டு போய் சேர்க்கப்போறோம். ``அடுத்து ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளாத பட்சத்தில் அந்தக் கூட்டத்தையும் நாங்க புறக்கணிக்கத் தயாராக இருக்கோம்" என்றனர்.

அக்கூட்டத்தில், ஜனவரி 26 கூட்டத்துக்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் புறக்கணிப்பது, சம்பந்தப்பட்ட இந்த அதிகாரிகளைக் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுபற்றி ஊராட்சி மன்றத் தலைவர் அகமது தம்பியிடம் கேட்டபோது, ``திட்டமிட்டபடி, அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஆனால், நடைபெறவே இல்லை என்று தவறான தகவலைப் பரப்புகின்றனர். பற்றாளர் அரைமணி நேரம் தாமதமாக வந்தது உண்மைதான். 10.45-க்கு ஆரம்பித்தோம். வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டது. அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அனைத்து அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் நடத்தக் கூடாது என்று பிரச்னை செய்துவிட்டு, பஸ் மறியலுக்கு முயற்சி செய்தனர்.

மக்கள் கிராம சபைக்கூட்டம்
மக்கள் கிராம சபைக்கூட்டம்

தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்திடுமென்று டி.எஸ்.பி கேட்டுக்கிட்டதால், ஒரு மாதத்துக்குள் சிறப்புக் கிராம சபைக் கூட்டம், நடத்திக்கலாம் என்று சொல்லி 38-வது தீர்மானமாக நிறைவேற்றி நோட்டில் எழுதினோம். அதற்கு முன்பு 37 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 216 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர், சிறப்புக் கூட்டம் சம்பந்தமாக அதிகாரிகளை அணுகியபோது, மிகவும் தவிர்க்க முடியாத, அவசியமான, பொருத்தமான காரணமிருந்தால், அப்படி நடத்தலாம். அதுவும், எந்த அதிகாரிகளையும் கலந்துகொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது.

தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியரை அணுகி, மனு நீதி முகாம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள், அதில் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டு நிறைவேற்றுவார்கள் என்றனர். இதுபற்றியும், சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் கூறிவிட்டேன். ஆனாலும், சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றனர். விளம்பர நோக்கத்துக்காகவே இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர்" என்றார்.