Published:Updated:

மயிலாடுதுறை: `சுருக்குமடி வலை பயன்பாடு; மீனவர்களிடையே மோதல்!’ - குவிக்கப்பட்ட போலீஸார்

சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -
சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -

மயிலாடுதுறை, காரைக்கால், நாகை உள்ளிட்ட 64 மீனவக் கிராமத் தலைவர்களுடன், அரசுத் தரப்பு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் வகையில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், குடும்பத்தினருடன் கடலில் இறங்கித் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -
சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -

இதையடுத்து வஜ்ரா வாகனத்துடன் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். சுருக்குமடி வலை தொடர்பாக மீனவர்களுக்குள் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து போய்விடுவதாகக் குற்றம் சாட்டும் இதர மீனவர்கள், அந்த வலைகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ள போதிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் சுருக்குமடி வலைகளை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் சாதாரண வலைகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

நாகை: `சுருக்குமடி வலை பிரச்னை’ - பேரணி, மோதலில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு

கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருமுல்லைவாசல் மீனவர்களுக்கும், கீழமூவர்க்கரை மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதைக் கவனித்த மீன்வளத்துறையினர், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்படும் மீன்களை, வாகனங்களுடன் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுருக்குமடி வலை மீனவர்கள், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராட்டத்தில் இறங்கினார்கள். சாதாரண வலைகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கும், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க முயன்ற பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -
சுருக்குமடி வலை - மீனவர்களிடையே மோதல் -

இந்த நிகழ்வால் மீனவக் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே.நாயர் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசி விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று சமாதானப்படுத்தினார். அதேநேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவக் கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 11 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 46 காவல் ஆய்வாளர்கள், 190 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்,டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவக் கிராமங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை, காரைக்கால், நாகை ,உள்ளிட்ட 64 மீனவக் கிராமத் தலைவர்களுடன், அரசுத் தரப்பு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு