Published:Updated:

தரமற்ற பொங்கல் பொருள்கள்: சுட்டிக்காட்டிய விகடன்; மாற்றி வழங்கப்பட்ட பொருள்கள் - மக்கள் மகிழ்ச்சி!

பொங்கல் பரிசுத் தொகுப்பு!

இன்று கலப்படம் இருந்ததாகக் கூறப்பட்ட நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு நல்ல தரமான பொங்கல் பொருள்கள் குனிச்சி கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன.

தரமற்ற பொங்கல் பொருள்கள்: சுட்டிக்காட்டிய விகடன்; மாற்றி வழங்கப்பட்ட பொருள்கள் - மக்கள் மகிழ்ச்சி!

இன்று கலப்படம் இருந்ததாகக் கூறப்பட்ட நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு நல்ல தரமான பொங்கல் பொருள்கள் குனிச்சி கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன.

Published:Updated:
பொங்கல் பரிசுத் தொகுப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ராஜபாளையம், கொடும்பம்பள்ளி, செலந்தம்பள்ளி, கரம்பூர், கந்திலி உள்ளிட்ட பல்வேறு நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில், மிளகு பாக்கெட்டில் இலவம்பஞ்சு கொட்டையும், அவரை கொட்டையும், வெண்டைக்காய் விதையும், அதேபோல மிளகாய்த் தூள் - தனியா தூள் பாக்கெட்டுகளில் மரத்தூள் கலந்திருப்பதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டினார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படப் பொருள்கள் வழங்கப்பட்டதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் நியாய விலைக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் நியாய விலைக் கடை
ராஜபாளையம் நியாய விலைக் கடை

இது தொடர்பாகச் சம்பவ இடத்துக்குச் சென்று நாம் விசாரித்து நேற்று முன் தினம் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல, பொதுமக்களின் குற்றச்சாட்டினையும், நியாய விலைக் கடை ஊழியர்களின் விளக்கத்தையும் காணொளியாகவும் நம்முடைய தளத்தில் பதிவிட்டிருந்தோம். நம்முடைய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலப்பட பொருள்கள்
கலப்பட பொருள்கள்

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விகடன் காணொளியைக் குறிப்பிட்டுப் பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், விகடன் செய்தி எதிரொலியாக தற்போது திருப்பத்தூர் குடோன் தர ஆய்வாளர் ரவிச்சந்திரன் அரசின் பொங்கல் பொருள்களைச் சரிவர ஆய்வு செய்யாமல் நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுமதித்ததாகக் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலூர் மண்டல மேலாளர் ராஜா உத்தரவிட்டிருக்கிறார்.

மாற்றி வழங்கப்பட்ட பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொருள்கள்

முன்னதாக நேற்றைய தினம், அரசு அதிகாரிகள் பொது மக்கள் அனைவருக்கும் தரமான பொங்கல் பொருள்கள் மீண்டும் வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில், இன்று கலப்படம் இருந்ததாகக் கூறப்பட்ட நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு நல்ல தரமான பொங்கல் பொருள்கள் குனிச்சி கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன.

மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்
மாற்றி வழங்கப்பட்ட பொங்கல் பொருள்கள்

மிளகு, மிளகாய்த் தூள், தனியா தூள் எனத் தரமற்ற பொருள்கள் மாற்றப்பட்டு, நல்ல தரமான பொருள்கள் வழங்கப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism