Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் குறித்த உங்கள் சந்தேகங்கள்.. வாசகர்களே ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #DoubtOfCommonMan

உள்ளாட்சித் தேர்தல் பற்றி வாசகர்கள் அதிகம்பேர் கேட்ட, முன்னுரிமை தரவேண்டிய, முக்கியமானதாகக் கருதப்படும் 15 கேள்விகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

Doubt of common man
Doubt of common man

வாசகர்களுக்கு வணக்கம்.

வாசகர்களையும் செய்தியறைப் பணியில் இணைக்கும் முயற்சியாக விகடனின் #DoubtOfCommanman பகுதி செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் அளித்துவந்த மகத்தான ஆதரவைத் தொடர்ந்து, தற்போது அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறோம். இதுவரை நாங்கள் எதுமாதிரியான கட்டுரைகளை எழுத வேண்டும், எந்த சந்தேகங்களுக்கு விடைசொல்ல வேண்டும் என்பதை உங்கள் கேள்விகளின் வழியாக எங்களுக்கு வழிகாட்டி வந்தீர்கள். எங்கள் ஆசிரியர் குழு அவற்றைப் பரிசீலித்து, தொடர்ந்து கட்டுரைகள், வீடியோக்கள் மூலம் விடையளித்து வந்தது. இந்தமுறை அந்தப் பரிசீலனைப் பணியிலும் வாசகர்களை ஈடுபடுத்த விரும்புகிறோம்.

DoubtOfCommanman
DoubtOfCommanman

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து உங்களுக்கு இருக்கும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எங்களுக்கு அனுப்புமாறு சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்தோம். ஏராளமான வாசகர்கள் கேள்விகளை அனுப்பியிருந்தார்கள்.

வாசகர்கள் அதிகம்பேர் கேட்ட, முன்னுரிமை தரவேண்டிய, முக்கியமானதாகக் கருதப்படும் 15 கேள்விகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இந்த 15 கேள்விகளில், எந்தக் கேள்வியை முக்கியமான கேள்வியாகக் கருதுகிறீர்கள்? எதற்கெல்லாம் பதில் தரவேண்டும் எனத் தேர்ந்தெடுக்கப்போவது நீங்கள்தான். கேள்விகேட்ட வாசகர்கள் மட்டுமன்றி, அனைத்து வாசகர்களையும் இந்த முயற்சியில் இணைக்கவே இந்த ஏற்பாடு.

கீழே உள்ள படிவத்தில் அந்த 15 கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. அந்தக் கேள்விக்கு உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்.