Published:Updated:

அவசர கதியில் தவறிவிழுந்த பயணி! - துரிதமாகச் செயல்பட்டு காப்பற்றிய ரயில்வே காவலர்

ரயில்வே காவலர் ஜெயன், துரிதமாகச் செயல்பட்டு, கீழே விழும் நிலையிலிருந்த பயணியைக் காப்பாற்றி பாதுகாப்பாக ரயிலின் உள்ளே அனுப்பிவைத்தார்.

தவறி விழுந்த பயணி
தவறி விழுந்த பயணி

கோவை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய ரயிலில் அவசர கதியில் ஏறி, தவறிக் கீழே விழ இருந்த பயணியை, ரயில்வே காவலர் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில், இன்று காலை 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, ஓடும் ரயிலில் அவசர கதியில் ஏறிய பயணி ஒருவர், படிக்கட்டில் நிலை தடுமாறிக் கீழே விழும் நிலைக்குச் சென்றார். அப்போது, நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் ஜெயன், துரிதமாகச் செயல்பட்டு, கீழே விழும் நிலையிலிருந்த பயணியைக் காப்பாற்றி பாதுகாப்பாக ரயிலின் உள்ளே அனுப்பிவைத்தார்.

ரயில்வே காவலர்
ரயில்வே காவலர்

ரயில்வே காவலரின் துரிதமான நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது. துரிதமாகச் செயல்பட்டு பயணியைக் காப்பாற்றிய ரயில்வே காவலர் ஜெயனைப் பாராட்டும் வகையில், சான்றிதழும் பணமும் ரயில்வேத்துறை சார்பில் வழங்கப்பட்டன. இந்தச் சம்பவம், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் பொதுமக்களிடம் ஜெயன் வெகுவாக பாராட்டுகளை பெற்று வருகிறார்.