Published:Updated:

கனமழை எச்சரிக்கை; தமிழகத்துக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்
இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென் மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டிருப்பதாலும், தென்மேற்கு பருவக் காற்று காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் தமிழகத்தில் 1.10.2021, 2.10.2021 இரண்டு தினங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்,

வடமாநிலங்களைப் புரட்டிப்போட்ட கனமழை! - டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
வானிலை
வானிலை

கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை
வி.ஶ்ரீனிவாசுலு

இன்று மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல நாளை, நாளை மறுநாள் குமரிக்கடல், தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இந்தச் சூறாவளி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு