Published:Updated:

பர்கூர் மலைப்பகுதியில் தொடரும் கனமழை... 3-வது நாளாக தண்ணீரில் மிதக்கும் அந்தியூர்!

மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அந்தியூர் நகர்ப்பகுதி.

அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஈரோடு மாவட்டம், அந்தியூரையொட்டி பர்கூர் மலைப்பகுதி அமைந்திருக்கிறது. அந்தியூர், பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டருவியாக மாறி வரப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் அணையை வந்தடைகிறது. தொடர் நீர்வரத்து அதிகரித்துவருவதன் காரணமாக இந்த இரண்டு அணைகளும் நிரம்பிவிட்டன. குறிப்பாக வரப்பள்ளம் அணை நிரம்பியதையடுத்து உபரிநீர் முழுவதும் காட்டாறாகப் பெருக்கெடுத்து ஓடி எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

நிரம்பி வழியும் வரட்டுப்பள்ளம் அணை.
நிரம்பி வழியும் வரட்டுப்பள்ளம் அணை.

நேற்று இரவும் பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி, வரட்டுப்பள்ளம் அணையை வந்தடைந்தது. வரட்டுப்பள்ளம் அணைக்கு வரக்கூடிய 2,600 கனஅடி தண்ணீர் முழுவதும் உபரிநீராக வெளியேறி கெட்டிசமுத்திரம், அந்தியூர் பெரிய ஏரியைச் சென்றடைகிறது. ஏற்கெனவே இந்த ஏரிகளும் நிரம்பிவிட்டதால் முழுமையாக வெளியேறும் உபரிநீர் வாய்க்காலையும் மீறி அந்தியூர் ஊருக்குள் பாயத் தொடங்கிவிட்டது.

அந்தியூரிலுள்ள பெரியார் நகர், அழகர் நகர், கண்ணப்பன் கிணறு வீதி ஆகிய பகுதிகளில்  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தியூரிலிருந்து பவானிக்குச் செல்லும் வழியிலுள்ள அண்ணாமடுவு பகுதியில் 200 மீட்டர் தூரத்துக்கு வெள்ளநீர் ஓடுகிறது. எனவே, பவானி மற்றும் அம்மாபேட்டைக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

அந்தியூர் வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.
அந்தியூர் வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.

இந்தப் பகுதிகளில் போலீஸாரும் வெள்ளப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், வருவாய்த்துறையினருடன் இணைந்து நிலமையைக் கண்காணித்துவருகின்றனர்.
ஊருக்குள் வெள்ளநீர் பாய்வதால் பவானி, ஈரோடு பேருந்துகள் பிரம்மதேசம் வழியாக அம்மாபேட்டைக்கும், அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாகச் செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மூன்றாவது நாளாக அந்தியூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை.
நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை.

அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லும் மழைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதால் அவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.