Published:Updated:

`வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மையம்; 3 நாள்களுக்கு கனமழை..!' - வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு மையம் - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவாகியிருக்கிறது.

`வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மையம்; 3 நாள்களுக்கு கனமழை..!' - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவாகியிருக்கிறது.

Published:Updated:
காற்றழுத்தத் தாழ்வு மையம் - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவாகியிருக்கிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறும். மேலும், அது அடுத்த மூன்று தினங்களில் அது தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை - சென்னை
கனமழை - சென்னை

நாளை (10.11.2022), தமிழகம், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-ம் தேதியைப் பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர், 12-ம் தேதியைப் பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை - சென்னை
கனமழை - சென்னை

சென்னையில், அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று தினங்களுக்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.