Published:Updated:

நீலகிரி: ஒரு மணிநேர மழைக்கே வெள்ளக்காடான அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில்!

அரசு தாவரவியல் பூங்கா

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதி முழுக்கவே மழைநீர் சூழ்ந்து... சுற்றுலாப் பயணிகளும், பூங்கா ஊழியர்களும் வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

நீலகிரி: ஒரு மணிநேர மழைக்கே வெள்ளக்காடான அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில்!

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதி முழுக்கவே மழைநீர் சூழ்ந்து... சுற்றுலாப் பயணிகளும், பூங்கா ஊழியர்களும் வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

Published:Updated:
அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோடை விழா தற்போது நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி வரும் 20-ம் தேதி தொடங்கவிருக்கிறது. தொடரந்து 5 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்தச் சிறப்பு வாய்ந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசு தாவரவியல் பூங்கா
அரசு தாவரவியல் பூங்கா

கோடை சீசன் தற்போது களைகட்டியிருப்பதால் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஊட்டி நகரில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. தொடர் மழையால் நீலகிரியில் காட்டுத்தீ அபாயம் கட்டுக்குள் வந்திருக்கிறது. தேயிலை, மலை காய்கறி விவசாயமும் செழிக்க ஆரம்பித்திருக்கிறது. கூடலூரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் தோட்டமூலா பகுதியில் உள்ள 10-க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதி முழுக்கவே மழைநீர் சூழ்ந்து... சுற்றுலாப் பயணிகளும், பூங்கா ஊழியர்களும் வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய ஊட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன், ``ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நுழைவாயிலில் பணிபுரியும் பணியாளர்கள் தண்ணீரில் தத்தளிப்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. முறையாக மழைநீர் வடிகால்களை அமைத்து, மக்கள் நிம்மதியாக கண்டு ரசித்துச் செல்வதை பூங்கா நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அரசு தாவரவியல் பூங்கா
அரசு தாவரவியல் பூங்கா

இது குறித்து பூங்கா நிர்வாகத்திடம் பேசினோம். ``பூங்கா நுழைவுவாயில் அருகிலிருக்கும் குளம் மழையில் நிறைந்ததால் அதிக அளவில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism