Published:Updated:

`சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்!' - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் தொடர் மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளால் பரவலாக மழை பெய்துவருகிறது. அடுத்த நான்கு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

`சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்!' - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளால் பரவலாக மழை பெய்துவருகிறது. அடுத்த நான்கு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
சென்னையில் தொடர் மழை

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டராக பகுதிகளில் இன்று (01.09.2022) தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (01.09.2022) தமிழ்நாடு, புதுவையில் அநேகமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் தொடர் மழை
சென்னையில் தொடர் மழை

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (02.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும்‌ சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3-ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 04, 05-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையில் தொடர் மழை
சென்னையில் தொடர் மழை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும், அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌" என்று தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக, இன்று தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.