Published:Updated:

ராஜபாளையம்: தூக்கத்திலிருந்து எழுந்து தாயை தேடிய குழந்தை; தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சோகம்

தண்ணீர் தொட்டி

ராஜபாளையம் அருகே, தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தை தாயைத்தேடி சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியானது. இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம்: தூக்கத்திலிருந்து எழுந்து தாயை தேடிய குழந்தை; தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சோகம்

ராஜபாளையம் அருகே, தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தை தாயைத்தேடி சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியானது. இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தண்ணீர் தொட்டி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி கம்பர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். மில் தொழிலாளியான இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், பசவேஸ்வரன், முத்துலட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மணிகண்டன் வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தார். மூத்தமகன் பசவேஸ்வரன் பள்ளிக்கு சென்றிருந்தான். அந்தசமயம், குழந்தை முத்துலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தை தூங்குவதாக எண்ணி மாரீஸ்வரி, மாடியில் ஈரம் உலர்த்தப்போட்டிருந்த துணியை எடுக்க சென்றிருந்ததாக தெரிகிறது. அந்தசமயம் விழித்துக்கொண்ட குழந்தை முத்துலட்சுமி, தாயை காணாமல் தேடியதாக தெரிகிறது. அப்போது வாயில்படி அருகே தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக குழந்தை முத்துலட்சுமி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையறியாத மாரீஸ்வரி, உலர்ந்த துணிகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது தனது குழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளார்.

வாயில்
வாயில்

அப்போது, தற்செயலாக தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது குழந்தை முத்துலட்சுமி மூர்ச்சையாகி அசைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பதறியபடி குழந்தையை தூக்கி அவர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.