Published:Updated:

`செல்லாக் காசுக்கு மாற்றுப் பணம்!'- கோவை பாட்டியை நெகிழவைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்

கோவையில் செல்லாக் காசை சேமித்து வைத்த மூதாட்டிக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவியுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம்

கோவை கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். வயது 92. இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். கமலம்மாள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை பீரோவில் வைத்துள்ளார்.

கமலம்மாள்
கமலம்மாள்

அப்படி, ரூ.33,000 சேமித்துவைத்திருக்கிறார். ஆனால், அவையெல்லாம் செல்லாக் காசு என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நோட்டுகள்.

வயதாகிவிட்டதால் அம்மாவுக்குச் சரியாகக் காது எல்லாம் கேட்காது. பண மதிப்பிழப்பு நேரத்தில், நாங்கள் வெளியூரில் இருந்தோம். அம்மாவிடம் இதுப்பற்றிச் சொன்னபோது, ‘என்கிட்ட எங்கடா பணம் இருக்கு? எதுவும் இல்ல’ என்று சொன்னார். இதனால், அப்போது நாங்களும் விட்டுவிட்டோம்.

கமலம்மாள்
கமலம்மாள்

பிறகு ஒருநாள் பீரோவைச் சுத்தப்படுத்தியபோதுதான் பணம் இருப்பது எங்களுக்குத் தெரிந்தது. ஒரு புடவைக்குக் கீழ்தான் இந்தப் பணம் எல்லாம் இருந்தது" என்று கமலம்மாளின் மகன் கோபால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இந்தச் செய்தியைப் பார்த்த ரஜினி மக்கள் மன்ற கோவை மாவட்ட இணைச் செயலாளர் ஜே.பி.சண்முகம் கமலம்மாள் பாட்டிக்கு உதவ முன்வந்துள்ளார். இன்று காலை கமலம்மாள் பாட்டியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்ற சண்முகம் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கமலம்மாளின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி, 33,000 ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.

ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம்

அவர்களுக்கு நன்றி சொன்ன கமலம்மாள், ரஜினியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் சொல்லியிருக்கிறார்.