Election bannerElection banner
Published:Updated:

`11-வது நாள் உண்ணாவிரதம்.. ஜீவ சமாதி!'- முருகனின் முடிவால் திணறும் வேலூர் சிறை அதிகாரிகள்

 முருகன்
முருகன்

வேலூர் சிறையில், 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கைதிகளான முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இருவரும், இலங்கை மற்றும் லண்டனில் உள்ள தங்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேச சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

வேலூர் சிறை
வேலூர் சிறை

சிறை நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், சிறையிலேயே ‘ஜீவ சமாதி’ அடைய அனுமதிக்கக் கோரி கடந்த 1-ம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

``இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துகிட்டுதான் இருக்கிறா'' - மகள் நளினி பற்றி அம்மா!

இதனால் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. சிறை மருத்துவர்கள் முருகனின் உடல்நிலையைத் தினமும் பரிசோதனை செய்கிறார்கள். இரண்டு நாள்களாக முருகனுக்கு ‘குளுகோஸ்’ ஏற்றப்படுகிறது. 30 ஆண்டு சிறை வாசம் முருகனைக் கவலைக்குள்ளாகியிருக்கிறது. ஏப்ரல் மாதம் 27-ம் தேதி, முருகனின் தந்தை இலங்கையில் மரணமடைந்தார்.

நளினி
நளினி

‘‘கடைசியாகத் தந்தையின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க விரும்புகிறேன்’’ என்று கூறி வீடியோ கால் அனுமதி கேட்ட முருகனுக்கு அந்த நேரத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது சிறை நிர்வாகம். இதுபோன்ற காரணங்களால் வாழ்க்கையை வெறுத்த முருகன் ‘ஜீவசமாதி’ அடையும் முடிவிலிருந்து பின்வாங்காமல் இன்றுடன் 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார், என்கிறது சிறை வட்டாரம்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு