Published:Updated:

"இன்னைக்குப் பொழுது நல்லா விடிஞ்சிருக்கு; புது வாழ்க்கை தொடங்கப் போறேன்னா என் மகள்"- நளினியின் அம்மா

நளினி, பத்மா (நளினியின் அம்மா) ( File Photo )

நளினியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இன்றைய தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

"இன்னைக்குப் பொழுது நல்லா விடிஞ்சிருக்கு; புது வாழ்க்கை தொடங்கப் போறேன்னா என் மகள்"- நளினியின் அம்மா

நளினியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இன்றைய தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

Published:Updated:
நளினி, பத்மா (நளினியின் அம்மா) ( File Photo )
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட ஆறு பேரை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி சில மாதங்களுக்கு முன் விடுதலை அடைந்தார். அப்போதே மற்ற ஆறு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் விடுதலை ஆகவில்லை. எனவே அந்த ஆறு பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கில்தான் இன்று இவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

மேலும் தமிழக அமைச்சரவை இவர்களை விடுதலை செய்யலாம் என நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அவற்றை ஆளுநர் மத்திய உள்துறைக்கு அனுப்பிய பின்னணியில், பேரறிவாளன் விடுதலையான அடிப்படையில் இவர்களை உச்சநீதிமன்றம் இன்று  விடுவித்துள்ளது. 

நளினி
நளினி
நளினியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இன்றைய தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

"எவ்வளவோ சந்தர்ப்பங்கள்ல மனம் 100 சதவிகிதம் விரக்தி நிலைக்குப் போயிருக்கு. ஆனா ஒரு சிறு புள்ளி அளவு நம்பிக்கை என் மககிட்ட இருந்தது. அந்த நம்பிக்கை இன்னைக்கு நிஜமாகிடுச்சு. அந்த ஏழு பேர்ல ஒரு பெண்ணாக் கிடந்து அத்தனை துயரங்களையும் அனுபவிச்ச என் மகளை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு, அங்க உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த  வழக்குல வாதாடிய வழக்கறிஞர்கள், இப்போதைய, அப்போதைய தமிழ்நாடு அரசு, ஆதரவு தந்த அரசியல் தலைவர்கள், எங்களுக்காக இரக்கப்பட்டவங்க, குரல் கொடுத்தவங்க, ஆறுதல் வார்த்தை சொன்னவங்கன்னு அத்தனை பேருக்கும் கை கூப்பி எங்க நன்றியைத் தெரிவிச்சிக்கிடுறேன்' என்கிறார் நளினியின் அம்மா பத்மா.

'இன்னைக்குப் பொழுது எனக்கு நல்லா விடிஞ்சிருக்கு. புதுசா ஒரு வாழ்க்கையைத் தொடங்கப் போறேன்'னு சொன்னா என் பொண்ணு' என்ற இவரின்  வார்த்தைகளிலேயே கண்களின் கண்ணீரைக் காண முடிந்தது.

நளிளியின் சகோதரர் பாக்யநாதனோ, "காலம் கடந்த நீதின்னாலும் இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியும் கண்ணீருமா வரவேற்கிறோம். தங்கள் பக்கம் நியாயம் இருக்கும் நம்பற மக்களை இந்திய நீதித்துறை கை விடாதுங்கிறதுக்கு இந்த விடுதலை ஒரு உதாரணம்" என்கிறார்.