Published:Updated:

‘கொரோனா அச்சம்.. சத்தியமங்கலம் எல்லையில் ராமநாதபுரம் மீனவர்கள்!’ - சொந்த ஊர் திரும்ப முடியாத சோகம்

சத்தியமங்கலம் எல்லையில் மீனவர்கள்
News
சத்தியமங்கலம் எல்லையில் மீனவர்கள் ( விகடன் )

நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் மங்களூர் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க முடியாத நிலையும் உருவானது.

கர்நாடக மாநிலத்திற்கு மீன்பிடிக் கூலிகளாகச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 650 மீனவர்கள் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக கர்நாடக எல்லையில் உள்ள சத்தியமங்கலம் சோதனைச் சாவடி பகுதியில் தவித்து வருகின்றனர்.

சாலையில் காத்திருக்கும் மீனவர்கள்
சாலையில் காத்திருக்கும் மீனவர்கள்
விகடன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டுப் படகு மூலம் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தமிழகக் கடல் பகுதியில் போதிய மீன்வளம் இல்லாத நிலையில் இவர்களில் நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் மீன்பிடிக் கூலிகளாகக் கடலுக்குச் சென்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் இதற்கென தமிழக மீனவர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அச்சம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் மங்களூர் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க முடியாத நிலையும் உருவானது.

ராமநாதபுரம் மீனவர்கள்
ராமநாதபுரம் மீனவர்கள்
விகடன்

இதையடுத்து மங்களூரிலிருந்து வெளியேறிய மீனவர்களில் 39 பேர் கடந்த 3 தினங்களுக்கு முன் ராமநாதபுரம் திரும்பிய நிலையில் அனைவருக்கும் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் கொரோனா ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிந்துள்ள நிலையில் மீனவர்கள் அனைவரும் பார்த்திபனூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களைத் தொடர்ந்து மங்களூரில் தங்கியிருந்த மேலும் 650 மீனவர்கள் வாடகை கார், வேன்களில் ராமநாதபுரம் புறப்பட்டனர். கர்நாடக மாநில எல்லையில் இவர்களை வழிமறித்த போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இவர்களுக்குக் கொரோனா சோதனை மேற்கொண்டதுடன், அங்கிருந்து தமிழக எல்லைக்குள் கால்நடையாக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சத்தியமங்கலம்- பண்ணாரி இடையிலான சோதனைச் சாவடிக்கு வந்த இவர்களுக்குத் தமிழக அதிகாரிகளால் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிந்த நிலையில் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப வாகனங்கள் ஏதுமின்றிச் சாலைகளிலேயே தங்கியுள்ளனர்.

சாலையில் தவிக்கும் மீனவர்கள்
சாலையில் தவிக்கும் மீனவர்கள்
விகடன்

இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) மாவட்ட செயலாளர் கருணாமூர்த்திக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ''கொரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 650-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சத்தியமங்கலம்-பண்ணாரி இடையிலான வனப்பகுதியில் தமிழகச் சோதனைச் சாவடி பகுதியில் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, எல்லைப்பகுதியில் உள்ள சாலையில் காத்திருக்கும் அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பின்னர் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.