Published:Updated:

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான இளைய மன்னர் மரணம்! - ராஜ மரியாதையுடன் நாளை உடல் நல்லடக்கம்

மன்னர் மரணம்

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் ராஜகுமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான இளைய மன்னர் மரணம்! - ராஜ மரியாதையுடன் நாளை உடல் நல்லடக்கம்

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் ராஜகுமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Published:Updated:
மன்னர் மரணம்

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் ராஜகுமரன் சேதுபதி (வயது 56). இவர் முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் மன்னருமான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் மகன் டாக்டர் நாகேந்திரன் துரையின் புதல்வர். இவர் மனைவி லட்சுமி குமரன் சேதுபதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் தக்காராகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்துவந்தார்.

ராஜகுமரன் சேதுபதி
ராஜகுமரன் சேதுபதி

இவர் ராமநாதபுரம் அரண்மனையில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்த நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. இவரின் திடீர் இறப்பு ராமநாதபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மன்னர் உடல்
அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மன்னர் உடல்

மன்னரின் உடல் அரண்மனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நாளை ராஜாங்க முறைப்படி அவர் உடலுக்கு மன்னர் அலங்காரம் செய்யப்பட்டு, உடல் தேரில் ராஜ உடையில் அரண்மனையைச் சுற்றி வீதியுலா கொண்டு செல்லப்படும் எனவும், பின்னர், அரண்மனைக்குள்ளாகவே அவர் உடல் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism