Published:Updated:

கடலுக்குள் பாய்ந்த மழைநீர்; தடுத்துத் திருப்பிய மக்கள்; பசுமையாய் மாறிய கிராமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கால்வாய் மூலம் மழை நீர் சேகரிப்பு
கால்வாய் மூலம் மழை நீர் சேகரிப்பு

வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறையாத அளவுக்கு நீர் மேலாண்மையை மக்களுடன் சேர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள் திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகத்தினர்.

உபரியாக கடலுக்குச் செல்லும் மழை நீரை ஊரிலுள்ள குளத்துக்குச் செல்லும் வகையில் மாற்றி 20 ஆண்டுகளாக மழை நீர் சேகரிப்பில் சாதித்து வருகிறது திருப்புல்லாணி ஊராட்சி.

மழை நீர் சேகரிப்பு
மழை நீர் சேகரிப்பு

தற்போது பெய்த பெரு மழையில், பெருகிய தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் குளங்களுக்குச் செல்ல வைத்து மழை நீரை வீணாக்காமல் உபயோகமாக்கியுள்ளனர்.

வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறையாத அளவுக்கு நீர் மேலாண்மையை மக்களுடன் சேர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள் திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகத்தினர்.

திருப்புல்லாணி
திருப்புல்லாணி

ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரக்கோட்டை கண்மாய் நிறைந்து வரத்துக்கால்வாய் வழியாக இவ்வூருக்குத் தண்ணீர் வந்தாலும், அதிகமாகப் பெய்தாலும் மழை நீர் நிலத்தில் தங்காமல் பொன்னங்கழி கானல் நீர் ஓடை மூலம் அருகிலுள்ள சேதுக்கரை வழியாகக் கடலுக்குள் உடனே சென்றுவிடுவது காலங்காலமாக நடந்து வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெய்கின்ற மழையால் ஊர் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரம் மிகக் குறைந்து மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில், 2001-ம் ஆண்டு அரசு அறிவித்த மழை நீர் சேமிப்புத் திட்டத்தை அப்போது ஊராட்சி நிர்வாகத்திலிருந்த பிரதிநிதிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

மழை நீர் சேகரிப்பு
மழை நீர் சேகரிப்பு
சென்னை மழை பாதிப்பு: அதிமுக அரசு செய்யத் தவறியவையும், திமுக அரசு செய்யவேண்டியவையும் என்னென்ன?

மாவட்ட நிர்வாகத்திடம் தங்கள் ஊர் நிலையை எடுத்துக்கூறி 3.5 லட்சம் ரூபாய் நிதி பெற்று கண்மாய் நீரும், மழை நீரும் கடலுக்குள் செல்லாத வகையில் சிறிய அணை ஏற்படுத்தி, அங்கு தேங்கும் தண்ணீரை பெரிய கிணறுகளில் நிரப்பி, அதை மோட்டார் மூலம் பம்பு செய்து குழாய்கள் மூலம் அருகிலுள்ள 3 ஊருணிகளை நிரப்பி, கடைசியாக ஊருக்கு நடுவே அமைந்துள்ள 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆதி ஜெகந்நாதர் கோயில் தெப்பக்குளத்தில் சேரும் வகையில் அமைத்துள்ளனர்.

இதனால் ஒவ்வோர் ஆண்டும் உபரி மழை நீர் நேராக கடலுக்குள் செல்லாமல் குளங்களுக்குச் செல்கிறது. தற்போது பெய்த மழையில் தேங்கிய நீரையும் வீணாக்காமல் பாதுகாத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு: 142 அடியை எட்டும் தண்ணீர்; 7 ஆண்டுகளில் 4-வது முறை; இன்றைய நிலவரம் என்ன?

இதுபற்றி ஊராட்சித் தலைவர் கஜேந்திர மாலாவிடம் கேட்டபோது, ``முன்பிருந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உருவாக்கிய இந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், எங்கள் ஊர் தண்ணீர் பஞ்சமில்லை. அனைத்து வீட்டு கிணறுகளிலும் தண்ணீர் குறைந்த ஆழத்தில் உள்ளது. ஊரைச் சுற்றி மரம் செடி கொடிகள் நன்றாக வளர்ந்துள்ளன. ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. பல ஊர்க்காரர்களும் எங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு