Published:Updated:

தமிழகப் படகுகளை ஏலம்விடும் இலங்கை; 2-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என மீனவர் சங்கம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்

`தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் ஏலம்விடுவதைத் தடுக்காவிட்டால், 2-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம்’ என மத்திய அரசுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களின் 105 படகுகளைக் கைப்பற்றிய இலங்கை கடற்படை, அவற்றை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி ஆலோசனைக் கூட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள், கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்தத் தீர்மானத்தில், தமிழர்களின் 105 படகுகளை ஏலம்விடப்போவதாக அறிவித்த இலங்கை கடற்படையின் செயலைத் தடுக்காவிட்டால், வரும் 2-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்

மேலும், இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியுரிமை ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தஜ் கோரிக்கையில் கூடுதலாக, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிக்குமாறும் ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.