Published:Updated:

நீலகிரி: பாட்டில்களில் துளையிட்டு மதுவகைகளை காலி செய்த எலிகள்! - அதிர்ச்சியில் ஊழியர்கள்

பாட்டில்களை காலி செய்த எலிகள்
பாட்டில்களை காலி செய்த எலிகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 10-க்கும் அதிகமான ஒயின் பாட்டில்களின் மூடியில் துளையிட்டு ஒயினை காலி செய்த எலிகளால் ஊழியர்கள் aதிர்ச்சியில் உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ம் தேதி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்துவரும் நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. வகை ஒன்றில் இருந்த நீலகிரி மாவட்டத்தில், தற்போது தொற்று பாதிப்பு மெல்ல கட்டுக்குள் வரும் நிலையில், 58 நாள்களுக்குப் பிறகு பல புதிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. அவற்றில் டாஸ்மாக் மதுக்கடைகளும் அடக்கம். நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 2.74 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனை ஆகியுள்ளன.

பாட்டில்களை காலி செய்த எலிகள்
பாட்டில்களை காலி செய்த எலிகள்

இந்தநிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் காளம்புழா பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை ஊழியர்கள் திறந்தனர். மது வகைகள் அடுக்கப்பட்டிருந்த பகுதியில் ஒயின் பாட்டில்களின் மூடிகள் சிதைக்கப்பட்டு காலி பாட்டில்களாக இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தபோது எலிகள் இந்த வேலையை செய்திருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த விவகாரம் குறித்து நம்முடன் பேசிய அந்த மதுக்கடையின் ஊழியர், ``பல நாள்களாகக் கடை திறக்கப்படவில்லை. ரூ.1,680 மதிப்பிலான குவாட்டர் அளவுள்ள 12 ஒயின் பாட்டில்களின் மூடிகளில் துளையிட்டு அவற்றை காலி செய்திருக்கின்றன எலிகள்.

பாட்டில்களை காலி செய்த எலிகள்
பாட்டில்களை காலி செய்த எலிகள்

பக்கத்தில் இருந்த மது பாட்டில்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து எங்களின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். விசாரணை நடைபெற்றுவருகிறது. ஒயின் பாட்டில்களைப் பாதுகாப்பாக வைக்குமாறு சொன்னார்கள்" என்றார் சிரித்தபடியே.

அடுத்த கட்டுரைக்கு