Published:Updated:

`ரேஷன் பொருள்கள் கடத்தலை காட்டிக் கொடுத்த வீடியோ!’ -மதுரையில் சிக்கிய கடத்தல்காரர்கள்

அரிசி மூட்டைகளையும், வேனையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடை பொறுப்பாளர் காந்திமதி, கடத்தலில் ஈடுபட்ட வீரபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய உணவுப் பொருள்களை வழங்காமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பொருள்களைக் கடத்திய ரேஷன் கடை ஊழியர்கள் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேசன் பொருள் கடத்தல்
ரேசன் பொருள் கடத்தல்

மதுரையில் ரேஷன் பொருள்களைக் கடத்துவது சகஜமாக நடந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால், கொரோனா காலத்திலும் அது தங்கு தடையின்றி நடந்து வருவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாள்களுக்கு முன் மதுரை அண்ணாநகரில் கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான ரேஷன் கடை முன் மாருதி ஆம்னியை நிறுத்தி அரிசி, பருப்பு, சீனி மூட்டைகளை சாவகசமாக ஏற்றுவதை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரேசன் பொருள் கடத்தல்
ரேசன் பொருள் கடத்தல்

இதைப்பற்றி சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதற்கு, இது மதுரையில் நடந்தது அல்ல என்றும், பழைய வீடியோ என்றும் கூறி சம்பவத்தை மறைக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த வீடியோ கலெக்டர் மற்றும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறைக்கும் சென்றதால் உடனே விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டுறவு துறையின் துணைப் பதிவாளர், பதிவாளர், மதுரை வடக்கு தாசில்தார், மதுரை அண்ணாநகர் காவல் துறை, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை என அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் கடத்தல் நடந்தது உண்மை என்று உறுதியானது.

ரேஷன் பொருள் கடத்தல்
ரேஷன் பொருள் கடத்தல்

அதைத்தொடர்ந்து அரிசி கடத்திய வழக்கில் டிரைவர் விக்னேஸ்வரன், குட்டை கண்ணன், மணிகண்டன், ரேஷன் கடை எடையாளர் விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசி மூட்டைகளையும், வேனையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் கடை பொறுப்பாளர் காந்திமதி, கடத்தலில் ஈடுபட்ட வீரபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு