சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு வரக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்திவருவதாகவும், அரசுப் பள்ளிகளை மாற்றத் தொடர்ந்து முயன்று வருவதாகவும், அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக இருப்பதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இருமொழிக் கொள்கைதான் நமது கொள்கை என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கூறினார்.
