தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று மற்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாளை மற்றும் நாளை மறுநாளில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மற்றும் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.