Published:Updated:

`அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!'- வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை
News
மழை

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `பொங்கல் தினமான இன்றும் (14-ம் தேதி) நாளையும் (15-ம் தேதி) கடலோர மாவட்டங்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரிப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்' என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

மேலும், `15 மற்றும் 16-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, 17 மற்றும் 18-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz