Published:Updated:

”கேரள அரசு போல் கடன் கொடுக்கலாமே?” - தமிழக அரசுக்கு உணவகப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

ஹோட்டல்
ஹோட்டல்

கேரள அரசு, உணவகப் பணியாளர்களுக்கு வங்கி மூலமாக ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளது. அதேபோல தமிழக அரசும், வட்டியில்லா வங்கிக்கடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, அன்றாடம் வேலைக்குச் சென்று பணம் ஈட்டுவோரின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா போன்று தமிழகத்திலும், தினக்கூலிக்குச் செல்வோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஹோட்டல்
ஹோட்டல்

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உணவகப் பணியாளர்கள் நலச் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதில், கேரள அரசு, உணவகப் பணியாளர்களுக்கு வங்கி மூலமாக ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளது. அதேபோல தமிழக அரசும், வட்டியில்லா வங்கிக்கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

`ஒரே நாளில் 18 பேர் டிஸ்சார்ஜ்; கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்!’- நம்பிக்கையளிக்கும் தேனி

இது தொடர்பாக, தமிழ்நாடு உணவகப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் பழனியாண்டி கூறும்போது, “கொரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. பார்சல் மட்டுமே கொடுக்கப்படும் ஹோட்டல்களில், சமையலர்களைத் தவிர வேறு யாரும் வேலைக்கு அழைக்கப்படுவதில்லை. ஒரு ஊரில் 100 ஹோட்டல் இருக்கிறது என வைத்துக்கொண்டால், 10 ஹோட்டல்கள்தான் பார்சல் கொடுக்கிறார்கள். மீதமுள்ள 90 ஹோட்டல்கள் மூடப்பட்டு தான் உள்ளன.

மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

இதனால், ஹோட்டல்களில் வேலை செய்யும் தினக்கூலிப் பணியாளர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கையில் பணம் இல்லாமல், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கக்கூட முடியாமல் தவிக்கின்றனர். நாங்கள் முடிந்த அளவு உதவி செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசு, உணவகப் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில், வங்கி மூலமாக அவர்களது கணக்கிற்கு ரூ10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு