Published:Updated:

பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்த கொரோனா! - கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளைவிட சென்னை, கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி புதன்கிழமை சென்னையில் 226 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
`சந்தை விலை ரூ.105; வேலுமணி டிரஸ்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்' கோவை மாநகராட்சியில் அறப்போர் இயக்கம் மனு!

முக்கியமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவிவருகிறது. ஏற்கெனவே பல்வேறு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆங்காங்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.செவிலியர் கல்லூரியில் கேரளா மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, `வெளிமாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கோவை வந்தவுடன் அவர்கள் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

ஆனால், சரவணம்பட்டி கல்லூரியில் மேலும் 46 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றாமல், அலட்சியமாக இருந்ததற்காக கல்லூரி நிர்வாகத்துக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``மாவட்டத்திலுள்ள அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் (Departmental Stores / Super Markets நீங்கலாக) தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கோவை
கோவை

மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், அடுமனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாதலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்கள், உழவர் சந்தைகளில் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வாரச் சந்தைகளுக்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது, பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 82% பொது மக்களுக்கு முதல் தவணை கொரேனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

வரும் 20-ம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், இதர கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு