Published:Updated:

போலீஸ் தவறு செய்தால், வாய்தா… கோழித்திருடனுக்கு என்கவுண்ட்டர்! பல் இளிக்கும் பாலியல் வழக்குகள்

பாலியல் புகார் ( pixabay )

``பாலியல் குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் புகார் தெரிவிக்கலாம், ஒருவர்மீது விசாரணை நடத்தப்படலாம் என்கிறது சட்டம். எனவே, இந்த விவகாரத்தில் தன் தரப்பிலான நியாயத்தை நிரூபிக்க வேண்டியது முருகனுக்கு இருக்கும் சவால்கள்."

போலீஸ் தவறு செய்தால், வாய்தா… கோழித்திருடனுக்கு என்கவுண்ட்டர்! பல் இளிக்கும் பாலியல் வழக்குகள்

``பாலியல் குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் புகார் தெரிவிக்கலாம், ஒருவர்மீது விசாரணை நடத்தப்படலாம் என்கிறது சட்டம். எனவே, இந்த விவகாரத்தில் தன் தரப்பிலான நியாயத்தை நிரூபிக்க வேண்டியது முருகனுக்கு இருக்கும் சவால்கள்."

Published:Updated:
பாலியல் புகார் ( pixabay )

காவல்துறை ஐ.ஜி முருகன்மீது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் 2018-ல் பாலியல் புகார் கூறியிருந்தார். பல தளங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம், நான்காண்டுகளாகியும் இன்னும் தீர்வு கிடைக்காத சிக்கலாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. விசாகா கமிட்டியைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது இந்தப் பிரச்னை.

காவல்துறையில் பாலியல் புகார்
காவல்துறையில் பாலியல் புகார்

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 'ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்' என்று சி.பி.சி.ஐ.டி மற்றும் விசாகா கமிட்டிக்கு நீதிபதிகள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள இரண்டு பேர் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச்னையாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. இதில், நியாயமாகவும் விரைவாகவும் விசாரணை நடைபெறாமல், வழக்கின் போக்கு மிகவும் மெத்தனமாகவும், காலம் தாழ்த்தி கடத்திச்செல்லப்படுவதாகவும் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

இந்த விசாரணைப் போக்கு, காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை எவ்வாறு உறுதிசெய்யும்? துறை சார்ந்தவர்கள் தங்களின் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய இந்தக் கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் சந்தேகமே. இந்நிலையில் இந்த வழக்கின் போக்கு குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை டி.ஜி.பி ஒருவரிடம் பேசினோம்.

காவல்துறையில் பாலியல் புகார்
காவல்துறையில் பாலியல் புகார்

"இந்தப் பிரச்னையில் முருகன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரிதாக உண்மையில்லை என்றும், அவர்மீதான குற்றச்சாட்டுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

பாலியல் புகார் கூறியுள்ள பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, முருகனுக்குக் கீழ்நிலையில் பணியாற்றியிருக்கிறார். தன் பணியைச் சரியாகச் செய்யாமல், மேலதிகாரியான முருகன் கூறிய பணி ரீதியான கட்டளைகளுக்கு அந்தப் பெண் அதிகாரி முறையாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் அதிகாரிமீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க முருகன் முற்பட்டிருக்கிறார்.

பாலியல் புகார்
பாலியல் புகார்

இதனால் உருவான காழ்ப்புணர்ச்சியாலும் சிலரின் தூண்டுதல்களாலும்தான் முருகன்மீது அந்தப் பெண் அதிகாரி பாலியல் புகார் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பெண் அதிகாரிக்கு, ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் ஒருவர் உதவி செய்வதாகவும் பேச்சு உண்டு.

இந்தப் பிரச்னை வெடித்தபோது, முருகன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் செயல்பாடுகளிலும் முன்னாள் இந்நாள் காவல்துறை அதிகாரிகள் சிலர் தலையிட்டுள்ளனர். இதனால், விசாரணை சரியாக நடக்காது என்று முருகன் சந்தேகப்பட்டு, அந்த கமிட்டிமீது அதிருப்தி தெரிவித்தார். இதனாலும் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

காவல்துறையில் பாலியல் புகார்
காவல்துறையில் பாலியல் புகார்

இதனைத் தொடர்ந்து, விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக முருகன் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க இப்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படியான பேச்சுகள் ஒருபுறம் இருக்க, முருகன்மீதான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர்" என்று சொன்னவர், இனி இந்த வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் விளக்கினார்.

"இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் புகார் தெரிவிக்கலாம், ஒருவர்மீது விசாரணை நடத்தப்படலாம் என்கிறது சட்டம். எனவே, இந்த விவகாரத்தில் தன் தரப்பிலான நியாயத்தை நிரூபிக்க வேண்டியது முருகனுக்கு இருக்கும் சவால். முருகன் மற்றும் புகார் கூறிய பெண் அதிகாரி இருவருமே காவல்துறையில் வெவ்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர். இவர்கள் இருவருமே இந்த வழக்கில் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

காவல்துறையினர்...
காவல்துறையினர்...

விசாரணை கமிட்டி மற்றும் நீதிமன்றத்தின் விசாரணை நியாயமாகவும் நடுநிலையாகவும் இருந்தால், நிச்சயமாக சில மாதங்களிலேயே தீர்ப்பு வெளியாகலாம். ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை இழுத்தடிக்கவும், சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்கவும் தவறு செய்தவர்கள் முற்படுவார்கள். நீதிமன்றம் நடுநிலையாகச் செயல்பட்டால் மட்டுமே நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்.

இந்தச் சூழலில், டி.ஜி.பி-யான ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் புகாரையும் குறிப்பிட்டாக வேண்டும். காவல்துறை பெண் அதிகாரியிடம் ராஜேஸ்தாஸ் தவறாக நடந்துகொண்டதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. அந்தப் பிரச்னை நடந்தபோது சில உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். போதிய ஆதாரங்கள் இருந்தும் வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா? ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி, ராஜேஸ்தாஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடிப்பதாகச் சொல்கின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தும், அவருக்கு மாதாந்தர சம்பளம் கிடைக்கிறது. இப்படியே சில ஆண்டுகளை இழுத்தடித்து அவர் பணி ஓய்வு பெறவும் வாய்ப்புள்ளது. இந்தப் போக்கெல்லாம் சட்டத்தின்மீதான மக்கள் நம்பிக்கையைக் குறைக்கவே வழிவகை செய்யும். எனவே, சட்டத்தின் மாண்பை, துறை சார்ந்தவர்கள் காப்பாற்றினால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும்" என்று முடித்தார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி.

முக்கியத்துவம் வாய்ந்த புகார்கள் மற்றும் வழக்குகளில், விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றனவோ என்கிற சந்தேகம் தானாகவே எழுகிறது.

பாலியல் குற்றச்சாட்டு என்கிற மிகமோசமான குற்றச்சாட்டுகளுக்கு போலீஸ் துறை சார்ந்தவர்களே ஆளாகியிருக்கும் சூழலில், வாய்தா மேல் வாய்தாவாகப் போய்கொண்டிருக்கிறது. அதே சமயம் கோழித்திருட்டு, செல்போன் திருட்டு போன்றவற்றுக்கு என்கவுண்ட்டரே நடத்துகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால், காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்தவர்கள் மீதான வழக்குகள்தான், விரைவாக நடத்திமுடித்து, உடனுக்குடன் தீர்ப்புகள் தரப்பட வேண்டும். அப்போதுதான், அதிகார போதையில் தவறிழைக்கும் திமிர்பிடித்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பயம் வரும். ஆனால், நம் சட்டங்களும் நீதிக் கட்டமைப்பும் அதற்கு ஏற்றதாக இல்லாமலிருப்பது ஏன்?

இந்தப் போக்கு குறித்து, தன் பார்வயை முன் வைக்கிறார் சமூக ஆர்வலர் ஓவியா.

சமூக ஆர்வலர் ஓவியா
சமூக ஆர்வலர் ஓவியா

"நம் நாட்டில் சட்டத்துறை மற்றும் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் பல்வேறு வழக்குகளிலும் உரிய காலத்தில் சரியான நீதி கிடைக்காமல் போவதற்குக் காரணமாக இருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யக் கூடாது என்கிற வாதம் இந்தப் போக்கை மென்மேலும் வலுப்படுத்துகிறது.

கீழ் நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமான நீதி கிடைக்காமல் போனால், அதிகாரம் மற்றும் பணபலம் படைத்தவர்கள் பலரும் மேல் நீதிமன்றத்தில் முறையிடுகின்றனர். அந்த மேல்முறையீட்டு வழக்குகளில் பலருக்கும் சாதகமான தீர்ப்பும் கிடைக்கிறது. இதுவே, தனக்கெதிரான அநீதியை எதிர்த்து சாமானியர்கள் எல்லோராலும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட முடியுமா? நீதிமன்றம் செல்வது என்றாலே பெரும்பாலான மக்களுக்கு அச்சமும் எதிர்மறையான எண்ணமும்தான் இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவம் போன்று பல வழக்குகளிலும் உரிய காலத்தில் நீதி கிடைக்காமல் போனதற்கு இதுபோன்ற சிக்கல்கள்தான் காரணம்.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்போதே அந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து, விசாரணை மற்றும் தீர்ப்பு வெளியிடும் தேதி உறுதிசெய்யப்பட வேண்டும். இதையும் சட்டமாக்க வேண்டும். ஒருவேளை விசாரணையும் தீர்ப்பு வெளியாவதும் தாதமானால், காலக்கெடு நீட்டிப்புக்கான காரணத்தை நீதிமன்றமே பொதுவான பொறுப்பு அறிக்கையாக (Public Liability Report) வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். பாலியல் சார்ந்த வழக்குகளுக்குத் தனி நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். ஒருவர் தவறாக ஒருவர்மீது புகார் கொடுத்திருப்பது உண்மையானால் அவருக்கும் தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும். இதெல்லாம் சாத்தியமானாலே விரைவான நீதி எல்லா வழக்குகளிலும் உறுதிசெய்யப்படும்" என்று முடித்தார்.